
தில்லி கலால் கொள்கை வழக்கில் கைதுசெய்யப்பட்ட தொழிலதிபர் அமித் அரோராவுக்கு தில்லி நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய இடைக்கால ஜாமீன் வழங்கியது.
அரோராவின் மனைவிக்கு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்றும், அவரை கவனித்துக்கொள்ளவதற்காகவும் இடைக்கால ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ வழக்குகளுக்கான சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அரோராவுக்கு இரண்டு வாரம் நிபந்தனையுடன் இடைக்கால ஜாமீன் வழங்கி தில்லி நீதிமன்ற சிறப்பு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் ரூ.2 லட்சத்துக்கான தனிப்பட்ட பத்திரத்தில், அதே தொகைக்கான ஒரு ஜாமீனுடன் நீதிபதி நிவாரணம் வழங்கினார். மனைவிக்கு சிகிச்சை முடியும் வரை தில்லி என்சிஆரை விட்டு வெளியேறக்கூடாது. இந்த வழக்கின் சாட்சியங்களை அழிக்கவோ, சிதைக்கவோ கூடாது. மேலும் வழக்கின் எந்த சாட்சியையும் பாதிக்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலதிபா் அமித் அரோரா குருகிராமில் உள்ள ‘படி ரீடெய்ல்ஸ்’ தனியாா் நிறுவனத்தின் இயக்குநராக இருந்தவர். தில்லி கலால் கொள்கை வழக்கில் முறைகேடுகள் நிகழ்ந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை விசாரணையில் 6-ஆவது நபராக அமித் அரோரா அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
முன்னதாக இந்த வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, பிஆர்எஸ் தலைவர் கவிதா உள்ளிட்டோர் தற்போது நீதிமன்ற காவலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.