
பிரதமர் நரேந்திர மோடிக்கு கிடைத்த வெற்றி, அரசியலில் தார்மிக ரீதியாகவும், தனிப்பட்ட தோல்வியாக இருந்தாலும், அதை தேர்தலில் கிடைத்த மிகப்பெரிய வெற்றி போல பாஜகவினர் தம்பட்டம் அடிப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள 'எக்ஸ்' தளப் பதிவில், “இந்தியாவில் உள்ள பிரதமர்களில் ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு, தொடர்ந்து 3 ஆவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்க போவதாக தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.
ஒரு கட்சியை வழிநடத்தி 240 இடங்களில் வெற்றிபெறச் செய்வது மட்டும், ஒரு பிரதமரின் வேலை அல்ல. அதே நேரத்தில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு தொடர்ச்சியாக 1952 ஆம் ஆண்டில் 364 இடங்களிலும், 1957 ஆம் ஆண்டு 371 இடங்களிலும், 1962 ஆம் ஆண்டில் 361 இடங்களிலும் வெற்றிபெற்றார். போட்டியிட்ட அனைத்து முறையும் மூன்றில் இரண்டு பங்கு தனிப் பெரும்பான்மையுடன் மத்தில் ஆட்சி அமைத்தார். ஆயினும் அவர் தன்னை ஒரு ஜனநாயகவாதியாகவும், நாடாளுமன்றத்தை மிகவும் கவனமாக, நிலையான இருப்பில் வைத்திருந்தார்.
நேருவுக்குப் பிறகு தொடர்ச்சியாக மூன்று முறை பிரதமாக பதவியேற்கப் போகும் ஒரே மனிதர் மோடி மட்டும் அல்ல. நேருவைத் தொடந்து இந்திரா காந்தி, 1966, 1967, 1971 மற்றும் 1980 ஆகிய ஆண்டுகளில் 4 முறை பிரதமராகவும், அடல் பிஹாரி வாஜ்பாய், 1996, 1998 , 1999 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை பிரதமராகவும் பதவியேற்றனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் இந்த பரிதாபகரமான தேர்தல் நிலையை நியாயப்படுத்த என்னவேண்டுமானலும் சொல்லி அவர்கள் தம்பட்டம் அடித்துக்கொள்ளவார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.