
மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி அதிக இடங்களில் வெற்று முக்கிய எதிர்க்கட்சியாக உருவெடுத்திருக்கும் நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராகுல் ஏற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை யாருக்கு வழங்குவது என்பது குறித்து இன்று காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்க வேண்டிய சூழல் இருக்கும் நிலையில், இது தொடர்பான பல்வேறு ஊகங்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.
புது தில்லியில், காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரியிடம் எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி பதவியேற்க வேண்டும் என்ற வலியுறுத்தல் அதிகரித்து வருகிறதே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதனை நானும் ஒப்புக்கொள்கிறேன் என்று பதிலளித்துள்ளார்.
எனவே, காங்கிரஸ் கட்சியின் பல்வேறு தலைவர்களும், ராகுலே எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.
நடந்த முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 99 இடங்களை வென்றது. ராகுல் காந்தி மேற்கொண்ட இரண்டு நடைப்பயணங்களும் பிரசாரங்களுமே இந்த மாற்றத்துக்கு உதவியதாக கட்சியினர் நம்புகிறார்கள். மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக எண்ணிக்கையில் பெற்ற வெற்றிக்கு ராகுல் காந்தியே காரணம் என்றும் அனைத்துத் தலைவர்களும் கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராகுல் நிராகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.