
மும்பை விமான நிலையத்தில் ஒரே ஓடுதளத்தில் ஒரே நேரத்தில் 2 விமானங்கள இயக்கப்பட்ட விவகாரத்தில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு ஊழியர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலைய 27வது ஓடுபாதையில் நேற்று ஏர் இந்தியா விமானம் புறப்படும்போதே, அதே ஓடுபாதையில் இண்டிகோ விமானம் தரையிறங்கியது.
இந்த சம்பவத்தில் நல்வாய்ப்பாக எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இருப்பினும் அலட்சியமாக செயல்பட்ட விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்த விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. தற்போது இந்த விடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானமும் அதேசமயம் தேவி அஹில்யாபாய் ஹோல்கர் விமான நிலையத்திலிருந்து வந்த இண்டிகோ விமானமும் ஒரே ஓடுதளத்தில் ஒரே நேரத்தில் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.