
மணிப்பூர் முதல்வர் பைரன் சிங்கின் கூடுதல் பாதுகாப்பு வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் போராட்டக்காரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் காயமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று காலை மணிப்பூரின் கங்போபி மாவட்டம்,கோட்லென் கிராமத்தின் அருகே முதல்வர் பைரன் சிங்கின் பாதுகாப்புப் படையினரின் வாகனங்களின் மீது பலமுறை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு, இன்னும் தொடர்ந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதலில், பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கு துப்பாக்கி குண்டு துளைத்து காயம் ஏற்பட்டதாக காவால்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாதுகாப்பு வாகனங்கள் கலவரத்தால் பாதிக்கப்பட்ட ஜிரிபம் மாவட்டத்திற்கு செல்லும் வழியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
தில்லியிலிருந்து இம்பால் செல்லும் முதல்வர் பைரன் சிங், ஜிரிபம் மாவட்டத்தை ஆய்வு செய்ய செல்வதற்குத் திட்டமிட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த சனிக்கிழமை (ஜூன். 8) இரண்டு காவல் சோதனைச் சாவடிகள், வனத்துறை அலுவலகம் மற்றும் 70 வீடுகளைப் போராட்டக்காரர்கள் எரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.