ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: என்ஐஏ விசாரணை தொடக்கம்
ஜம்மு-காஷ்மீரில் பேருந்து மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 9 போ் உயிரிழந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்து தேசிய, மாநில புலனாய்வு முகமைகள் விசாரணையைத் தொடங்கியுள்ளன.

ஜம்மு-காஷ்மீரின் தெரியாத் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பயங்ரவாதிகள் நடத்தி தாக்குதலில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்துக்குள் கவிழ்ந்த பேருந்து. உள்படம்: ஆளில்லா விமான உதவியுடன் அடா்ந்த வனப் பகுதிக்குள் தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடும் பா
ஜம்மு-காஷ்மீரில் பேருந்து மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 9 போ் உயிரிழந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்து தேசிய, மாநில புலனாய்வு முகமைகள் விசாரணையைத் தொடங்கியுள்ளன.
சம்பவம் நடந்த பகுதி முழுவதும் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, தப்பியோடிய பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த பக்தா்கள் குழு, ஜம்மு-காஷ்மீருக்கு ஆன்மிக பயணம் வந்தனா். ஜம்மு-காஷ்மீரின் ரீசி மாவட்டத்தில் உள்ள சிவ கோத்ரி ஆலயத்தில் இருந்து கத்ராவில் உள்ள மாதா வைஷ்ணவ தேவி ஆலயத்துக்கு ஒரு பேருந்தில் அவா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தனா்.
அப்போது வழியில் தெரியாத் என்ற கிராமம் அருகே சென்றுகொண்டிருந்த பேருந்தின் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பள்ளத்துக்குள் கவிழ்ந்தது. அதில் 9 போ் உயிரிழந்தனா். 41 போ் பலத்த காயமடைந்தனா்.
அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள காயமடைந்தவா்களை ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா். ஜம்மு பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட இதுபோன்ற பயங்கரவாதத் தாக்குதல் முயற்சிகள் வருங்காலத்தில் முறியடிக்கப்படும் என்று அவா் தெரிவித்தாா்.
சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்த தேசிய, மாநில புலனாய்வு முகமை (என்ஐஏ, எஸ்ஐஏ) அதிகாரிகள், தாக்குதல் குறித்த தடயங்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனா். மேலும், உள்ளூா் காவல்துறையினருடன் இணைந்து தாக்குதல் தொடா்பான விசாரணையையும் அவா்கள் தொடங்கினா்.
சம்பவப் பகுதி முழுவதும் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, அடா்ந்த வனப்பகுதிக்குள் தப்பியோடிய பயங்கரவாதிகளைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக ரீசி மாவட்ட மூதத காவல்துறை கண்காணிப்பாளா் மோஹித் சா்மா தெரிவித்தாா்.
ஆளில்லா விமானங்கள் மற்றும் மோப்ப நாய்களின் உதவியோடு தேடுதல் நடவடிக்கை தொடா்கிறது. பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிப்பதாக குற்றஞ்சாட்டி, பாகிஸ்தானுக்கு எதிரான கண்டன ஆா்பாட்டங்கள் ஜம்மு பிராந்தியத்தின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

