
மோடோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா - புதிய ஸ்மார்ட் போன் இந்தியாவில் அறிமுகமாகும் தேதி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சமீபத்தில் இந்த ஸ்மார்ட் போனின் டீசர் விடியோ வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. சர்வதேச சந்தைகளில் உலாவரும் இந்த ஸ்மார்ட்போன், இந்திய சந்தைகளையும் விரைவில் ஆக்கிரமிக்க உள்ளது.
ஃபிளிப்கார்ட் போன்ற இணைய தள வர்த்தகத்தில் மட்டுமே மோடோரோலா எட்ஜ் 50 கிடைக்கும்.
இந்திய சந்தைகளில் ஜூன் 18ஆம் தேதி முதல் மோடோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா அறிமுகமாகிறது. இதன் சிறப்பம்சங்கள், விலை உள்ளிட்ட விவரங்களை முழுதாக அறியலாம்.
மோடோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா மூன்று வகைகளில் வெளியாகிறது. குறிப்பாக பின்புறம் மரப்பலகை போன்ற தோற்றத்தில் ஒரு வகை அறிமுகம் செய்யப்படுகிறது. இதனால் கைரேகைகள் பதிவது, கீறல்கள் விழுவது தவிர்க்கப்படும்.
6.7 அங்குலம் கொண்ட ஓஎல்இடி திரையுடன் 144Hz ரெஃப்ரெஷ்ங் ரேட் கொண்டது. ஸ்நாப் டிராகன் 8எஸ் ஜென் 3 சிப் கொண்டது. நீர்புகாத் தன்மை அளவீடு IP68 ரேட்டிங் உடையது.
50W திறனுடன் கேபிள் இல்லாமல் சார்ஜ் செய்யலாம். எனினும் 125W திறன் வரை தாங்கக்கூடியது. மின்கலன் (பேட்டரி) 4,500mAh திறன் கொண்டது.
மோடோரோலா எட்ஜ் 50 ஸ்மார்ட் போன்கள் மூன்று கேமராக்களைக் கொண்டது.
ஐஓஎஸ் வசதியுடன் கூடிய 50 மெகா பிக்சல் கொண்ட பின்புற கேமரா, 64 மெகாபிக்சல் டெலிபோட்டோ கேமரா, 50 மெகா பிகசல் அல்ட்ரா வைட் கேமரா என மூன்று கேமராக்கள் உள்ளன.
ரேம் 16 ஜிபி, நினைவக சேமிப்பு திறன் 1000 ஜிபி வரை உள்ளது. (1TB)
மோடோரோலா எட்ஜ் 50 புரோ வகை இந்தியாவில் ரூ.31,999-க்கு விற்கப்படுகிறது. எனினும் அதிக நினைவக திறன் உள்ளதால் மோடோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா வகை ஐரோப்பிய சந்தைகளில் ரூ.88,870 (இந்திய மதிப்பு) க்கு விற்கப்படுகிறது.
எனினும் இந்திய சந்தைகளில் அறிமுகமாகும்போது இதன் விலை ரூ.40,000 முதல் ரூ.50,000 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.