ஆந்திரத்தின் தலைநகர் அமராவதி! சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

விசாகப்பட்டினம் பொருளாதார தலைநகராக உருவாக்கப்படும் என்று உறுதி தெரிவித்துள்ளார்.
ஆந்திரத்தின் தலைநகர் அமராவதி! சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
DOTCOM
Published on
Updated on
1 min read

ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகராக அமராவதியை முதல்வராக பதவியேற்கவுள்ள சந்திரபாபு நாயுடு செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.

முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு புதன்கிழமை பதவியேற்கவுள்ள நிலையில், விஜயவாடாவில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் எம்எல்ஏக்களின் கூட்டத்தில் இதனை அறிவித்தார்.

மேலும், விசாகப்பட்டினம் பொருளாதார தலைநகராகவும், மேம்பட்ட சிறப்பு நகரமாகவும் உருவாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

எம்எல்ஏக்களின் கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:

“அமராவதி, ஆந்திரத்தின் தலைநகராக இருக்கும். நாங்கள் ஆக்கபூர்வமான அரசியலை மேற்கொள்வோம், பழிவாங்கும் அரசியலை அல்ல. விசாகப்பட்டினம் மாநிலத்தின் வணிகத் தலைநகராக இருக்கும். மூன்று தலைநகர்களை உருவாக்க முயற்சிப்பது போன்ற விளையாட்டுகளை நாங்கள் விளையாட மாட்டோம். போலாவரம் திட்டத்தை நிறைவேற்றுவோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

ஆந்திரத்தின் தலைநகர் அமராவதி! சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
அமராவதியில் எகிறும் நிலத்தின் விலை! ஆந்திரத்தின் புதிய தலைநகர்!

கடந்த 2019 ஆம் ஆண்டு ஒய்எஸ் ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்ற பிறகு விசாகப்பட்டினத்தை நிர்வாகத் தலைநகராகவும் அமராவதியை சட்டப்பேரவை தலைநகராகவும் கர்னூலை நீதித்துறை தலைநகராகவும் உருவாக்கப்படும் என்று அறிவித்தார்.

ஜெகன் மோகம் ரெட்டி அரசின் முடிவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அமராவதியை தலைநகராக உருவாக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஆந்திர அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், தேர்தல் பிரசாரத்தின் போது அமராவதியை தலைநகராக்குவேன் என்று வாக்குறுதி அளித்த சந்திரபாபு நாயுடு, பதவியேற்பதற்கு முன்னதாகவே அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com