
நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாணுக்கு ஆந்திரத்தின் துணை முதல்வர் பதவி வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவையில் ஜனசேனை கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக பவன் கல்யாண் பெயரை மூத்த தலைவர் நாதெண்டலா மனோகர் முன்மொழிந்தார். இதற்கு அனைத்து எம்எல்ஏக்களும் ஒருமனதாக ஆதரவு தெரிவித்ததால், ஜனசேனை சட்டப்பேரவைக் கட்சித்தலைவராக பவன் கல்யாண் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
பவன் கல்யாண் பிதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸுக்கு கட்சி எதிராக 70,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
175 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் ஜனசேனை கட்சிக்கு 21 உறுப்பினர்கள் உள்ளனர். பவன் கல்யணுக்கு வழங்கப்பட்ட 21 பேரவை மற்றும் 2 மக்களவைத் தொகுதிகளிலும், தனது கட்சி வேட்பாளர்கள் அனைவரையும் வெற்றிபெறச் செய்துள்ளார். இதனால் ஆந்திரத்தில் தெலுங்கு தேசம் கூட்டணி 164 தொகுதிகளை கைப்பற்றி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை தோல்வியுற வைத்துள்ளது. இதன்மூலம் பவன் கல்யாணுக்கு துணை முதல்வர் பதவி வழங்ககூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் 164 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும் வெற்றி பெற்றது.
தெலுங்கு தேசம் - 135
ஜனசேனை - 21
பாஜக - 8
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.