கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

நீட் கவுன்சலிங் நடத்த தடையில்லை: உச்ச நீதிமன்றம்

நீட் கவுன்சலிங் நடத்த தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

Published On :

புது தில்லி: மருத்துவக் கல்லூரிகளில், இளநிலை மருத்துவர் மாணவர் சேர்க்கைக்கான நீட் கவுன்சலிங் நடத்த தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், நீட் தேர்வில் குளறுபடிகள் நடந்ததாகக் கூறி, தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வலியுறுத்தி வழக்குரைஞர் சாய் தீபக் உள்ளிட்ட பலர் தாக்கல் செய்த மனுக்கள் அனைத்தும் ஒன்றாக இணைத்து விசாரிக்கப்படும் என்று கூறியிருக்கும் உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஜூலை 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

வினாத்தாள் கசிவு, தேர்வில் முறைகேடு தொடர்பாக எழுந்திருக்கும் புகார்கள் குறித்தும், மறுதேர்வு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருப்பது குறித்தும் பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டுள்ளது.

அதேவேளையில், நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மருத்துவக் கலந்தாய்வு நடத்த தடை விதிக்கவும் உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக நாடு முழுவதும் தேசிய தேர்வு முகமை நடத்திய நீட் தேர்வில் குளறுபடி நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆள் மாறாட்டம், குறிப்பிட்ட தனியார் பயிற்சி மையத்தில் படித்த மாணவர்கள் அதிகம் பேர் முழு மதிப்பெண் எடுத்திருப்பது, ஒரே தேர்வு மையத்தில் ஒன்றாக தேர்வெழுதிய மாணவர்கள் முழு மதிப்பெண் எடுத்தது, தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே மாணவர்களுக்கு வழங்கப்பட்டதாக என ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

நீட் தோ்வு முடிவுகளில் குளறுபடிகள் உள்ளதால் மறுதோ்வு நடத்த உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் புதிய மனுக்கள் நேற்று தாக்கல் செய்யப்பட்டன. எனவே, நீட் தேர்வு தொடர்பான அனைத்து வழக்குகளும் ஒன்றாக இணைத்து விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு கடந்த மே 5-ஆம் தேதி நடத்தப்பட்டது. அப்போது பிகாா், ராஜஸ்தானில் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாா் சா்ச்சையானது. அதனைத் தொடா்ந்து தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், முன்னெப்போதும் இல்லாத வகையில் நாடு முழுவதும் 67 மாணவா்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்ததும், ஹரியாணாவில் ஒரே தோ்வு மையத்தில் தோ்வு எழுதிய 6 போ் முதலிடம் பிடித்தது ஆகிய சம்பவங்கள் சா்ச்சையைக் கிளப்பின.

நீட் தோ்வு முறைகேடு தொடா்பாக பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இதுதொடா்பாக விசாரணை மேற்கொள்ள உயா்நிலைக்குழுவை என்டிஏ அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.