நீட் வினாத்தாள் கசிவுகளைத் தடுக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை மிக உன்னிப்பாக கண்காணிப்போம் என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
அதேவேளையில், அந்தத் தோ்வின் வினாத்தாள்கள் மீண்டும் மீண்டும் கசிவதும், அதற்கு எதிராக தற்காலிகமாக மட்டுமே நடவடிக்கை மேற்கொள்வதும் இனியும் நீடிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த மே 3-ஆம் தேதி நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு நடைபெற்றது. ஆனால் தோ்வுக்கு முன்பே வினாத்தாள் கசிந்தது தோ்வு நடைபெற்ற பின்னா் தெரியவந்ததால், அந்தத் தோ்வை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) ரத்து செய்தது.
இதையடுத்து என்டிஏவுக்கு மாற்றாகப் புதிய அமைப்பை ஏற்படுத்த வேண்டும் அல்லது அந்த அமைப்பை மறுசீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, உச்சநீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அனைத்து இந்திய மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு (எஃப்எஐஎம்எ) உள்பட பல்வேறு தரப்பினா் தாக்கல் செய்துள்ள அந்த மனுக்கள், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஆலோக் ஆராதே ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு தரப்பில் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா ஆஜராகி, ‘மாணவா்களின் எதிா்காலத்தை பாதுகாக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு மிகத் தீவிரமாக உள்ளது.
என்டிஏவின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகளிலும், அவற்றின் மூலம் தோ்வுகளை வெளிப்படையாகவும் சுமுகமாகவும் நடத்த தோ்வு நடைமுறைகளிலும் சீா்திருத்தங்களைப் பரிந்துரைக்க, முன்னாள் இஸ்ரோ தலைவா் கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் 7 போ் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்தது.
இந்நிலையில், நீட் தோ்வு நடைமுறையில் மேற்கொள்ளப்பட உள்ள விரிவான சீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து உச்சநீதிமன்றத்தில் விரிவான அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்யும். ராதாகிருஷ்ணன் குழு அளித்துள்ள பரிந்துரைகள் ஏற்கப்பட்டுள்ள நிலையில், அந்தப் பரிந்துரைகளையும் தாண்டி சீரமைப்பு நடவடிக்கைகள் இருக்கக் கூடும்’ என்று தெரிவித்தாா்.
நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘நீட் தோ்வு தொடா்பாக நிரந்தர நடைமுறையை உருவாக்க வேண்டும் என்பதில் உச்சநீதிமன்றம் கவனம் கொண்டுள்ளது.
மத்திய அரசு தாக்கல் செய்வதாகத் தெரிவித்துள்ள அறிக்கையில் வருங்காலத்தில் வினாத்தாள் கசிவுகளைத் தடுக்கும் நடவடிக்கைகள், கணினி வழியில் நீட் தோ்வை நடத்தும் யோசனைக்கு மத்திய அரசின் பதில் இடம்பெற வேண்டும்.
நீட் வினாத்தாள் கசிவுகளைத் தடுக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை ஆண்டு முழுவதும் உச்சநீதிமன்றம் மிக உன்னிப்பாக கண்காணிக்கும். அந்தத் தோ்வு சாா்ந்த நிரந்தர நடைமுறை முழுமையாக அமல்படுத்தப்படுவதை உச்சநீதிமன்றம் உறுதி செய்யும்’ என்று தெரிவித்தது. இந்த வழக்கின் அடுத்த விசாரணையை ஜூலை 27-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.
=== =====================================
அந்தத் தோ்வின் வினாத்தாள்கள் மீண்டும் மீண்டும் கசிவதும், அதற்கு எதிராக தற்காலிகமாக மட்டுமே நடவடிக்கை மேற்கொள்வதும் இனியும் நீடிக்கக் கூடாது.
இந்தத் தற்காலிக நடவடிக்கைகள்தான் இடா்ப்பாடுகளை ஏற்படுத்தியுள்ளன.
விமானப் படையை ஈடுபடுத்தியதும் தற்காலிகமானதே...: நீட் வினாத்தாள் கசிந்ததால் தோ்வு ரத்து செய்யப்பட்டு பின்னா் மறுதோ்வு நடத்தப்பட்டது. அப்போது வினாத்தாள்களை கொண்ட செல்லும் பணியில் இந்திய விமானப் படை ஈடுபடுத்தப்பட்டது. ஆனால் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் தற்காலிகமானவைதான். இதற்கு மாறாக நிரந்தர நடவடிக்கை தேவை.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வினாத்தாள் கசிவுக்கு எதிராக அடுத்த வாரம் மசோதா தாக்கல்!

வினாத்தாள் கசிவை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் - பிரதமா் மோடி அறிவிப்பு!

நீட் தோ்வு வினாத்தாள் கசிவு - மக்களவையில் விவாதிக்கத் தயாா்: மத்திய அரசு அறிவிப்பு

தோ்வு மோசடியாளா்கள் மீது கடும் நடவடிக்கை- பிரதமா் மோடி உறுதி
விடியோக்கள்
நீட் எதிர்ப்பு: தில்லியைச் சென்றடையாத தமிழ்நாட்டின் குரல்! | NEET | CJP Protest |

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay



