
அமெரிக்கப் பெண்ணிடம் மோசடி செய்துவிட்டு, தலைமறைவாகியுள்ள இந்திய நகைக்கடை உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
அமெரிக்காவில் வசிக்கும் செரிஷ், ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள ஜோஹ்ரி பஜாரில் உள்ள ஒரு கடையில் இருந்து தங்க பாலிஷ் கொண்ட வெள்ளி நகைகளை ரூ.6 கோடிக்கு நகைகளை வாங்கியுள்ளார். பின்னர் கடந்த ஏப்ரல் மாதத்தில், அமெரிக்காவில் நடந்த ஒரு கண்காட்சியில் நகைகளை காட்சிப்படுத்தியபோது, அது போலியானது என்று தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த செரிஷ், ஜெய்ப்பூருக்கு வந்து கடை உரிமையாளர்களான ராஜேந்திர சோனி மற்றும் அவரது மகன் கௌரவ் ஆகியோரிடம் விசாரித்தபோது, உரிமையாளர்கள் இருவரும் மறுத்துள்ளனர். இதனால், செரிஷ் மே 18ஆம் தேதி கடை உரிமையாளர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், அமெரிக்க தூதரகத்தின் உதவியையும் அணுகியுள்ளார். தூதரகத்தின் தலையீட்டைத் தொடர்ந்து, ஜெய்ப்பூர் காவல்துறையினர் இந்த வழக்கை விசாரித்து, போலி நகைகள் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. ஆனால், குற்றம் சாட்டப்பட்ட கடை உரிமையாளர்கள் இருவரும் தற்போது தலைமறைவாகி விட்டனர். நகைகளின் நம்பகத்தன்மை குறித்த போலிச் சான்றிதழை வழங்கிய நந்த் கிஷோர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் கூடுதல் தகவலாக, குற்றம் சாட்டப்பட்டவர்கள் சமீபத்தில் ஜெய்ப்பூரில் ரூ.3 கோடி மதிப்பிற்கு வீடு வாங்கியுள்ளதும் தெரியவந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.