குடிநீர், மின்சாரம்: கேஜரிவாலுடன் அதிஷி ஆலோசனை!
தன்னை விட தில்லி மக்களைப் பற்றி அதிகம் கவலைப்படுகிறார் கேஜரிவால்.


தில்லியில் நிலவும் குடிநீர் மற்றும் மின்சாரப் பிரச்னைகளுக்கு மத்தியில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை மாநில அமைச்சர் அதிஷி, ஆத் ஆத்மி எம்பி ராகவ் சதா ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
கலால் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை அதிஷி மற்றும் எம்பி ராகவ் சதா இன்று சந்தித்து பேசினர்.
சந்திப்புக்குப்பின் அதிஷி செய்தியாளர்களிடம் கூறியதாவது,
மத்திய அரசின் பொய் வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜேரிவாலை இன்று சந்தித்தேன். அவர் தன்னை விட தில்லி மக்களைப் பற்றித் தான் கவலைப்படுகிறார்.
அவர் மின்சாரம் மற்றும் குடிநீர் தொடர்பான பிரச்னைகள் பற்றி கேட்டறிந்தார். திகார் சிறையில் உள்ள தொலைக்காட்சியில் தில்லியில் தண்ணீர் பிரச்னையைப் பார்த்ததாகவும், மிகவும் வருத்தமளிப்பதாகவும் அவர் கூறினார்.
தண்ணீர் பிரச்னையை சமாளிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும், ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறும், அனைத்து ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் பகுதிகளில் உள்ள மக்களுக்கு தண்ணீர் வழங்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.
உ.பி.யில் தீ விபத்து காரணமாக தில்லியில் ஏற்பட்ட மின்வெட்டு குறித்தும் அவர் கேட்டறிந்தார். எதிர்காலத்தில் மின்வெட்டு ஏற்படாமல் இருக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் கூட்டத்தை நடத்துமாறு அவர் கூறினார்.
முன்னதாக புதன்கிழமை பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், கேஜரிவாலின் மனைவி சுனிதா ஆகியோர் திகாரில் அவரைச் சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...