ஜூன் 26-ல் மக்களவைத் தலைவர் தேர்தல்!

18வது மக்களவைக்கான தலைவரை தேர்ந்தெடுப்படுப்பதற்கான தேர்தல் வரும் ஜூன் 26 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

18வது மக்களவைக்கான தலைவரை தேர்ந்தெடுப்படுப்பதற்கான தேர்தல் வரும் ஜூன் 26 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டின் 18-ஆவது மக்களவையின் முதல் கூட்டம் ஜூன் 24-ஆம் தேதி தொடங்கி ஜூலை 3 வரை நடைபெறவிருக்கிறது. இதில் புதிய எம்.பி.க்கள் பதவியேற்க்கின்றனர்.

அதேபோல், மாநிலங்களவை அமர்வு ஜூன் 27 தொடங்கி ஜூலை 3 வரை நடைபெறவிருக்கிறது. ஜூன் 27-ஆம் தேதி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு உரையாற்றவிருக்கிறார்.

நாட்டின் 18-ஆவது மக்களவைத் தேர்தல், கடந்த ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடத்தப்பட்டது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணிக்கு 234 இடங்கள் கிடைத்தன.

கோப்புப்படம்
பிரதமர் மோடி பகிரும் யோகாசனப் பயிற்சி விடியோக்கள்!

240 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்தது. தனிப்பெரும்பான்மை (272) கிடைக்காத நிலையில், தெலுங்கு தேசம் (16), ஐக்கிய ஜனதா தளம் (12) உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் அக்கட்சி ஆட்சியமைத்துள்ளது.

பிரதமராக தொடா்ந்து மூன்றாவது முறையாக நரேந்திர மோடி கடந்த ஜூன் 9-ஆம் தேதி பதவியேற்றாா். அவருடன் 71 போ் கொண்ட மத்திய அமைச்சரவையும் பதவியேற்றது.

இந்த நிலையில், 18-ஆவது மக்களவையின் முதல் கூட்டம் தொடங்கிய இரண்டு நாள்களுக்குப் பிறகு, புதிய மக்களவைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூன் 26 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற முதல் கூட்டத்தில் நீண்ட காலம் எம்பி பதவியில் இருந்த ஒருவர் இடைக்கால மக்களவைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

புதிய கூட்டத்தின் சில அமர்வுகளை இடைக்கால மக்களவைத் தலைவரே தலைமை தாங்குவார், புதிய எம்.பிக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைப்பார் மற்றும் மக்களவைத் தலைவர், துணை மக்களவைத் தலைவர் தேர்வுக்கான வாக்கெடுப்பையும் அவரே நடத்துவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com