பதவியேற்பில் ’ஓம் ஸ்ரீராம்’ எழுதிய மத்திய அமைச்சர்!
தெலுங்கு தேசத்தின் ராம்மோகன் நாயுடு, மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு, ’ஓம் ஸ்ரீராம்’ என எழுதியது பேசுபொருளாகி வருகிறது.
கடந்த ஜூன் 10ஆம் தேதியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் தெலுங்கு தேசக்கட்சியின் ராம்மோகன் நாயுடுக்கு விமானப் போக்குவரத்துத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ராம்மோகன் நாயுடு, விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்பதற்கு முன்பாக ’ஓம் ஸ்ரீராம்’ என 21 முறை எழுதிவிட்டு, அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டது தொடர்பான விடியோ வைரலாகி வருகிறது.
ஆந்திரப் பிரதேசத்தில், தெலுங்கு தேசத்தின் ராம் மோகன் நாயுடு ஸ்ரீகாகுளம் தொகுதியில் 7,54,328 வாக்குப்பதிவுகள் (61%) பெற்று, வெற்றி பெற்றிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.