குமாரசாமி  (கோப்புப் படம்)
குமாரசாமி (கோப்புப் படம்)

எம்.எல்.ஏ பதவியை ராஜிநாமா செய்தார் குமாரசாமி

ஹெச்.டி. குமாரசாமி மற்றும் பசவராஜ் பொம்மை எம்.எல்.ஏ பதவியை ராஜிநாமா செய்தனர்
Published on

அண்மையில் முடிவடைந்த மக்களவைத் தேர்தலில் எம்.பி.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் ஹெச்.டி. குமாரசாமி மற்றும் பாஜக தலைவர் பசவராஜ் பொம்மை இருவரும் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியை சனிக்கிழமை இன்று (ஜூன் 15) ராஜிநாமா செய்தனர்.

குமாரசாமி கர்நாடகத்தின் சன்னாபட்னா தொகுதியிலும், பசவராஜ் பொம்மை ஷிகாகோன் தொகுதியிலும் எம்.எல்.ஏ.வாக இருந்தனர்.

குமாரசாமி  (கோப்புப் படம்)
ஆந்திரத்தில் கிராமப்புற கல்வியை வலுப்படுத்த கவனம் செலுத்தும் நாரா லோகேஷ்!

அண்மையில் முடிவடைந்த மக்களவைத் தேர்தலில், கர்நாடகத்தின் மண்டியா தொகுதியில் 8,51,881 வாக்குகள் பெற்று, அதாவது 58.3 சதவிகிதம் வாக்குப்பதிவினைப் பெற்று மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் குமாரசாமி. தற்போது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் மத்திய எஃகு மற்றும் கனரக தொழில்துறை அமைச்சராக உள்ளார்.

பசவராஜ் பொம்மை ஹவேரி மக்களவைத் தொகுதியில் 7,05,538 வாக்குகளுடன் 50.5 சதவிகிதம் வாக்குப்பதிவு பெற்று, தற்போது நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதனால், இந்த இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளும் காலியாக இருப்பதால், இந்த இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல்களை தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com