கர்நாடகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பாஜக போராட்டம்!
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கர்நாடகம் முழுவதும் பாஜக சார்பில் நாளை (ஜூன் 17) போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா ஞாயிற்றுக்கிழமை கூறியுள்ளார்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிகரிக்கும் வகையில் எரிபொருளுக்கான விற்பனை வரியை கர்நாடக அரசு சனிக்கிழமை உயர்த்தியது.
இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா கூறுகையில், “ மாநில அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.3, டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.50 அதிகரித்துள்ளது. இந்த முடிவை முதல்வர் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
நாளை நாங்கள் மாநிலம் முழுவதும் போராட்டங்களை ஏற்பாடு செய்துள்ளோம். விலை உயர்வை திரும்பப் பெறும் வரை நாங்கள் அமைதியாக இருக்கப் போவதில்லை. மாநிலத்தின் அனைத்து மாவட்டத் தலைமையகங்களிலும் போராட்டம் நடத்தப்படும். மக்களைவைத் தேர்தலுக்குப் பிறகு, அவர்கள் (காங்கிரஸ் அரசு) எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளனர்” என்றார்.
மாநிலத்தின் வளர்ச்சியை பெருக்கும் நோக்கில் நிதியமைச்சராக உள்ள முதல்வர் சித்தராமையா, வருவாய் மற்றும் நிதி நிலையை ஆய்வு செய்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்த முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான சில நாட்களுக்குப் பிறகு, கர்நாடகத்தில் மொத்தமுள்ள 28 இடங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 19 இடங்களில், பாஜக 17 இடங்களையும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 2 இடங்களையும் கைப்பற்றியது. ஆளும் காங்கிரஸ் 9 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.