மேற்கு வங்க ரயில் விபத்து: உதவி எண்கள் அறிவிப்பு!

மேற்கு வங்க ரயில் விபத்து சம்பவம் தொடர்பாக கிழக்கு ரயில்வேத் துறை உதவி எண்களை அறிவித்துள்ளது.
மேற்கு வங்க ரயில் விபத்து: உதவி எண்கள் அறிவிப்பு!
Published on
Updated on
1 min read

மேற்கு வங்க ரயில் விபத்து சம்பவம் தொடர்பாக கிழக்கு ரயில்வேத் துறை உதவி எண்களை அறிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தின், டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள நியூ ஜல்பைகுரி அருகே கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது பின்னால் வந்த சரக்கு ரயில் மோதி இன்று (ஜூன் 17) விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ரயில் பெட்டிகள் பல தடம்புரண்டன. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக் குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுள்ளனர்.

மேற்கு வங்க ரயில் விபத்து: உதவி எண்கள் அறிவிப்பு!
மேற்கு வங்கம்: ரயில் விபத்தில் பலி 9ஆக உயர்வு!

மேலும், இந்த விபத்தில் 9 பேர் பலியானதாகவும், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விபத்தில் சிக்கியவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விபத்து தொடர்பான விவரங்களுக்கு கிழக்கு ரயில்வேத் துறையின் கீழ்க்காணும் உதவி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

உதவி எண்கள் - 033 2350 8794 (bsnl), 033 2383 3326

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com