
ஒடிசாவின் 17 சட்டப்பேரவையின் உறுப்பினர்களாக முதல்வர் மோகன் சரண் மாஜீ, துணை முதல்வர்கள் கேவி சிங் தியோ மற்றும் பிரவதி பரிதா மற்றும் பிஜேடி தலைவர் நவீன் பட்நாயக் ஆகியோர் செவ்வாய்க்கிழமை பதவியேற்றுக்கொண்டனர்.
முதல்வர் மற்றும் பிஜேடி தலைவர் பட்நாயக் உள்ளிட்ட புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு ஒடிசாவின் தற்காலிக சபாநாயகர் ரனேந்த பிரதாப் ஸ்வைன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
புதிதாகத் தேர்வு செய்யப்பட்டக எம்எல்ஏக்களின் பதவிப்பிரமாணம் இன்றும், நாளையும் நிகழும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசா மக்களவைத் தலைவருக்கான தேர்தல் ஜூன் 20-ம் தேதி நடைபெறுகிறது.
சட்டப்பேரவைக்கு வந்த முதல்வர் மற்றும் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் மரபுப்படி மகாத்மா காந்தியின் சிலைக்கு மலர் தூவி மரியாதைச் செலுத்தினார்கள்.
சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பிஜேபி (78) தொகுதிகளிலும், பிஜேடி (51), காங்கிரஸ் (14), சிபிஎம் (1) மற்றும் சுயேட்சைகள் (3) ஆகிய இடங்களிலும் வெற்றி பெற்று பெரும்பான்மையைப் பெற்றது.
147 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒடிசா பேரவையில், 82 பேர் முதல் முறையாக எம்எல்ஏக்களாக உள்ளனர்.
பிஜேடி தலைவரும் முன்னாள் முதல்வருமான நவீன் பட்நாயக் எதிர்க்கட்சித் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.