மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

குர்பானி படப் பகிர்வு: முஸ்லிம் கடை சூறை!

ஹிமாச்சலில் முஸ்லிம் ஒருவர் நடத்தும் துணிக்கடையை இந்துக்கள் திரண்டு சூறையாடினர்

News image

dot com

Updated On :19 ஜூன் 2024, 1:22 pm

குர்பானி படங்களைப் பகிர்ந்ததால், முஸ்லிம் ஒருவரின் துணிக்கடையைச் சூறையாடிய இந்து சமூகத்தினரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சம்பவத்தின் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஹிமாச்சலப் பிரதேசத்தில் சுக்விந்தர் சிங் சுகு தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. இந்த நிலையில், ஹிமாச்சலப் பிரதேசத்தின் நஹான் பகுதியில், ஜாவேத் என்பவர் துணிக்கடை நடத்தி வந்துள்ளார். முஸ்லிமான ஜாவேத், பக்ரீத் பண்டிகையையொட்டி குர்பானி புகைப்படங்களை தனது வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸில் பதிவிட்டிருந்தார். இந்தப் படத்தில் மாட்டிறைச்சியுடன் இருப்பது போன்று பதிவிடப்பட்டிருந்தது.

ஜாவேத்தின் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸைப் பார்த்த இப்பகுதி மக்கள், ஒன்றுகூடி, ஜாவேத் நடத்திவரும் துணிக்கடையில் நுழைந்து, கடையில் உள்ள துணிகளை வெளியில் வீசியும், பொருள்களை அடித்து உடைத்தும் உள்ளனர்.

இந்த சம்பவத்தின் போது, காவல்துறை அதிகாரிகள் சிலர் அங்கிருப்பதும் விடியோவில் தெரிகிறது. பின்னர், காவல்துறையினர் அப்பகுதி மக்களை அப்புறப்படுத்துவதும், ஜாவேத்தின் கடையை மூடுவதும் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.