பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தில்லிக்கு உரிய நீரைப் பெற இந்தியா கூட்டணி ஆதரவைக் கோரும் சஞ்சய்!

தில்லிக்கு உரிய நிரைப் பெறுவதற்கு போராடும் ஆத் ஆத்மி கட்சி..

News image
மாநிலங்களவை எம்.பி.சஞ்சய் சிங்
Updated On :20 ஜூன் 2024, 10:48 am

DIN

ஹரியாணாவில் இருந்து தில்லிக்கு உரிய நீரைப் பெறுவதற்கு இந்தியா கூட்டணியின் ஆதரவைத் தரவேண்டும் என்று மாநிலங்களவை எம்.பி.யான சஞ்சய் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.

செய்தியாளர்களுடன் நிகழ்த்திய கூட்டத்தில் உரையாற்றிய சிங், தேசிய தலைநகரில் தண்ணீர் நெருக்கடிக்கு பாஜக ஹரியாணாவுக்கு நிதியுதவி செய்வதாக குற்றம் சாட்டினார்.

தில்லிக்கு தண்ணீர் கிடைக்க வேண்டும் என்று அவர்கள் உண்மையிலேயே விரும்பினால் ஹரியாணா பவனுக்கு வெளியே போராட்டம் நடத்த வேண்டும். ஆனால் அவர்கள் செய்யவில்லை.

பாஜக ஆளும் ஹரியாணாவில் இருந்து தில்லியின் பங்கு தண்ணீரைப் பெறுவதற்காக இரண்டு நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் ஜூன் 21 முதல் காலவரம்பற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த உள்ளதாகவும் தில்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி கூறியுள்ளார். ஆனால் பாஜக இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்தப் போராட்டத்தில் எங்களுக்கு ஆதரவளிக்குமாறு இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.