
உத்தரப் பிரதேசத்தில் தனது மகனை கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் பஹ்ரைச் பகுதியில், நேற்று முன்தினம் (ஜூன் 20) தேதியில் தனது ஒரு வயது குழந்தை மயக்கமாக இருப்பதைக் கண்டு, குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். ஆனால், சிகிச்சையளித்த மருத்துவர் குழு குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இருப்பினும், குழந்தையின் தந்தை சுஜித் மீது சந்தேகமடைந்த தாயார், அவர் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
குழந்தையின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுஜித்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
சுஜித்திடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் தெரிவித்ததாவது, சுஜித்தின் மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருப்பதாகவும், அந்த குழந்தை சுஜித் மூலம் பிறந்த குழந்தை இல்லை என்று அவர் நம்புவதாகவும் பதிலளித்துள்ளார். அதனால் தான் குழந்தையை கொலை செய்ததாகவும் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.