பாகுபலி படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்த பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கல்கி 2898ஏடி'.
பிரபாஸுடன் கமல்ஹாசனும், அமிதாப் பச்சனும் இணைந்து இப்படத்தில் நடித்துள்ளதால், ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நாக் அஸ்வின் இயக்கியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஜூன் 27-ஆம் தேதி 'கல்கி 2898 ஏடி' திரைக்கு வரவிருக்கிறது.
ஏற்கனவே இதன் டிரைலர் வெளியாகி கவனம் பெற்ற நிலையில் நேற்றிரவு 2ஆவது டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. யூடியூப்பிலும் சமூக வலைதளங்களிலும் டிரெண்டிங்கில் இருக்கிறது.
வெளியான 10 மணி நேரத்தில் தெலுங்கில் 62 லட்சம், ஹிந்தியில் 50 லட்சம், தமிழில் 3.9 லட்சம், மலையாளத்தில் 91ஆயிரம் , கன்னடத்தில் 42 ஆயிரம் பார்வையாளர்களையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.