தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பிபவ் குமாரின் காவல் ஜூலை 6 வரை நீட்டிப்பு!

பிபவ் குமாரின் நீதிமன்றக் காவல் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image

பிபவ் குமார்

Updated On :22 ஜூன் 2024, 8:06 am

DIN

தில்லி முதல்வர் கேஜரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரின் நீதிமன்றக் காவல் ஜூலை 6 வரை நீட்டித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆத் ஆத்மியின் மாநிலங்களவை எம்பி ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் கடந்த மே 13-ம் தேதி முதல்வர் கேஜரிவாலின் இல்லத்தில் வைத்து அவரது தனி உதவியாளர் பிபவ் குமார் பலமுறை தாக்கியதாகக் கூறப்படும் வழக்கில் மே 18-ம் தேதி அவரை கைது செய்தனர்.

இந்த நிலையில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிபவ் குமாரின் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், சிறையில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது அவரது காவலை மேலும் ஜூலை 6 வரை நீட்டித்து நீதிபதி கௌரவ் கோயல் உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.