
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரான மாயாவதி தனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும், தனது அரசியல் வாரிசாகவும் நியமித்துள்ளார்.
இன்று, லக்னௌவில் நடந்த பகுஜன் சமாஜ் கட்சிக் கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியானது.
கடந்த மே மாதம், மாயாவதி தனது மருமகனை கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்தி நீக்கி, அவர் தனது வாரிசு இல்லை என்று அறிவித்திருந்தார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் பிண்ணனி மற்றும் அது எவ்வாறு டாக்டர் அம்பேத்கரின் கொள்கைகளுடன் இணைந்திருக்கிறது என்றும், சமூக மாற்றத்திற்கான இயக்கமாக மாறியதையும் பற்றிப் பேசிய அவர், கடந்த மாதம் இதுகுறித்த அறிவிப்பில், “கட்சியின் விருப்பத்தின் பேரில், எனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை அவருக்கு முழுப் பொறுப்பு வரை கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்தும், எனது அரசியல் வாரிசு என்ற பொறுப்பிலிருந்தும் நீக்கி உத்தரவிடுகிறேன்” என்று அறிவித்தார்.
தேர்தல் கூட்டங்களில் ஆகாஷ் ஆனந்த் உரையாற்றிய விதம் தவறாக இருந்ததால், கட்சியினர் கூறியதையடுத்து அவர் பதவியிலிருந்து கடந்த மாதம் நீக்கப்பட்டார்.
ஆனால், தற்போது அவர் மீண்டும் அதே பதவியில் தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.