
தில்லி மக்களவைத் தேர்தலில் ஏழு தொகுதிகளிலும் வெற்றி பெறச் செய்த மக்களை, பாஜக அரசு நீருக்கு ஏங்க வைப்பதாக ஆம் ஆத்மி அமைச்சர் கோபால் ராய் விமர்சித்துள்ளார்.
தில்லியில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில், அண்டை மாநிலமன ஹரியாணாவிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தில்லி அமைச்சர் அதிஷி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
தில்லியின் ஜானக்புரா பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய உண்ணாவிரதம் 4து நாளை எட்டியுள்ளது.
தில்லியில் நிலவிவரும் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வுகாண வலியுறுத்தி தில்லி அமைச்சர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி அமைச்சர் கோபால் ராய், தில்லி மக்கள் வெப்பத்தால் சிரமப்பட்டு அதிக தண்ணீர் தேவைப்பட்ட நேரத்தில், ஹரியாணா பாஜக அரசு தில்லி மக்களுக்கு தண்ணீரை நிறுத்தியதாக சுட்டிக்காட்டினார்.
தில்லி மக்கள் பாஜகவுக்கு வாக்களித்து தங்கள் எம்.பி.க்களை ஏழு தொகுதிகளிலும் வெற்றிபெறச் செய்ததாகவும், ஆனால், அதற்கு பலனாக தில்லி மக்களை ஒவ்வொரு சொட்டு தண்ணீருக்காகவும் ஏங்க வைக்க பாஜக சதி செய்துள்ளதாகவும் விமர்சித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.