வயநாடு எம்.பி. பதவியில் இருந்து ராஜிநாமா செய்த ராகுல் காந்தியின் கடிதத்தை மக்களவை இடைக்காலத் தலைவர் பர்த்ருஹரி மகதாப் ஏற்றுக் கொண்டார்.
மேலும், ரேபரேலி மக்களவைத் தொகுதியின் உறுப்பினராக ராகுல் காந்தி தொடர்கிறார்.
18-வது மக்களவைத் தேர்தலில் கேரள மாநிலத்தின் வயநாடு மற்றும் உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி ஆகிய தொகுதிகளில் காங்கிரஸின் ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதனைத் தொடர்ந்து, வயநாடு தொகுதியின் எம்பி பதவியை ராஜிநாமா செய்வதாகவும் ரேபரேலி தொகுதி உறுப்பினராக தொடரவுள்ளதாகவும் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், வயநாடு தொகுதியின் உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்து மக்களவை செயலகத்துக்கு ராகுல் காந்தி கடிதம் அனுப்பியிருந்தார்.
இன்று காலை 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியவுடன் ராகுல் காந்தியின் ராஜிநாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டதாக இடைக்காலத் தலைவர் அறிவித்தார்.
இந்த நிலையில், இன்று அல்லது நாளை ரேபரேலி மக்களவை தொகுதியின் உறுப்பினராக ராகுல் காந்தி பதவியேற்கவுள்ளார்.
வயநாடு மக்களவைத் தொகுதிக்கு வரவிருக்கும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தலைவா்களால் தகித்த தமிழகம்!

தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி!

ராகுல் காந்தியின் தமிழகம் வருகை எப்போது?

மருத்துவமனையில் சோனியா... ராகுல் காந்தியின் கேரள பிரசாரம் ஒத்திவைப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


