
அரசியலமைப்பு சட்டத்தை அடியோடு தகர்த்து தேசத்தை சிறைக்குள் அடைத்த நாள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்து இன்றுடன் 50 ஆண்டுகளாகும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி தெரிவித்திருப்பதாவது:
“அவசரநிலையை எதிர்த்த அனைத்து மாமனிதர்களுக்கும், பெண்களுக்கும் மரியாதை செலுத்தும் நாள் இன்று. அவசரநிலையில் இருட்டு நாள்கள் என்பது ஒவ்வொரு இந்தியனும் பெரிதும் மதிக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை காங்கிரஸ் எப்படி அடியோடி தகர்த்தது என்பதை நினைவூட்டுகிறது.
ஆட்சியை பிடிக்க, அன்றைய காங்கிரஸ் அரசு ஒவ்வொரு ஜனநாயகக் கொள்கையையும் புறக்கணித்து, தேசத்தை சிறைக்குள் அடைத்தது. காங்கிரஸுக்கு உடன்படாத அனைவரும் சித்தரவதை செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டார். நலிந்த பிரிவினரை குறிவைத்து சமூக ரீதியாக பிற்போக்குத்தனமான கொள்கைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.
அவசரநிலையை கொண்டு வந்தவர்கள் நமது அரசியலமைப்புச் சட்டத்தின் மீது அன்பை வெளிப்படுத்த எவ்வித உரிமையும் இல்லை. எண்ணற்ற சந்தர்ப்பங்களில் 356-வது பிரிவை திணித்து பத்திரிகை சுதந்திரத்தை அழிக்கும் மசோதாவை கொண்டு வந்தவர்கள். கூட்டாச்சி முறையை அழித்து அரசியலமைப்பின் அனைத்து அம்சங்களையும் மீறியவர்கள் காங்கிரஸ். அவர்களின் செயல்களை இந்திய மக்கள் பார்த்ததால்தான் மீண்டும் மீண்டும் நிராகரித்துள்ளனர்.” எனத் தெரிவித்தார்.
முன்னதாக நேற்று காலை மக்களவைக்கு வருகைதந்த பிரதமர் நரேந்திர மோடி, செய்தியாளர்கள் மத்தியில் பேசும்போது, அவசரநிலை பிரகடனத்தை குறிப்பிட்டு, அரசியல் சாசனம் துண்டு துண்டாக கிழிக்கப்பட்டு நாளையுடன் 50 ஆண்டுகள் ஆவதாக விமர்சித்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.