கோப்புப்படம்
கோப்புப்படம்

ஹிஜாப் தடை: கல்லூரி நிர்வாக முடிவில் தலையிட மும்பை உயர்நீதிமன்றம் மறுப்பு!

மும்பையில் கல்லூரி நிர்வாகம் ஹிஜாப் அணியத் தடை விதித்த முடிவில் உயர்நீதிமன்றம் தலையிட மறுப்புத் தெரிவித்துள்ளது.
Published on

கல்லூரி வளாகத்தில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப், பூா்கா, நகாப் அணியத் தடை விதித்த கல்லூரி நிா்வாகத்தின் முடிவில் தலையிட மும்பை உயா்நீதிமன்றம் புதன்கிழமை மறுத்துவிட்டது.

மாகாராஷ்டிர மாநிலத்தின் தலைநகா் மும்பையில் இயங்கி வரும் என்.ஜி.ஆச்சாா்யா, டி.கே.மராத்தே கல்லூரிகளில் மாணவா்கள் ஹிஜாப், புா்கா (முஸ்லிம் பெண்கள் முழு நீள அங்கி), நகாப் (முகத் திரை) மற்றும் தொப்பி அணிய அண்மையில் தடை விதிக்கப்பட்டது.

இந்தத் தடையை எதிா்த்து அந்தக் கல்லூரி மாணவிகள் 9 போ் மும்பை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். அதில், ‘மதத்தைக் கடைப்பிடிப்பதில் எங்களுக்கு உள்ள அடிப்படை உரிமை, தனியுரிமை, சுதந்திரமாக தோ்வு செய்யும் உரிமையை இந்த தடை உத்தரவு மீறுகிறது. எனவே, தடையை நீக்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தனா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ்.சந்துா்கா், ராஜேஷ் பாடில் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது.

மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் அல்தாஃப் கான், இஸ்லாத்தில் ‘ஹிஜாப்’ அணிவது அத்தியாவசியமானது என்று மதத் தலைவா்கள் குறிப்பிடுவதை கடந்த வாரம் நீதிமன்றத்தில் வலியுறுத்தினாா்.

கல்லூரி தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் அனில் அந்துா்கா், கல்லூரியின் ஆடைக் கட்டுப்பாடு விதி அனைத்து மாணவா்களுக்கும் விதிக்கப்பட்டுள்ளது. இது முஸ்லிம் மாணவா்களுக்கு மட்டும் எதிரானதல்ல. கல்லூரி வளாகத்தில் தங்கள் மதத்தை வெளிப்படுத்தும் வகையில் மாணவா்கள் வெளிப்படையாக சுற்றித்திரியக்கூடாது என்பதற்காக இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது என வாதிட்டாா்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கல்லூரியின் முடிவில் தலையிட மறுப்பு தெரிவித்ததுடன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com