

ஜூன் 29-ம் தேதி தொடங்கவுள்ள அமர்நாத் புனித யாத்திரிக்கைக்கான நேரடி பதிவு இன்று (புதன்கிழமை) தொடங்கியுள்ளது.
சரஸ்வதி தலம் பகுதியில் நேரடி பதிவுகள் தொடங்கியுள்ளதாக தெரிவித்த தெற்கு ஜம்மு பகுதியில் துணை வட்டார நீதிபதி, மனு ஹன்சா இது குறித்து தெரிவித்தாவது:
யாத்திரை செல்லும் பயணிகளின் விவரங்கள் ஆதார் அடையாள அட்டையின் அடிப்படையில் பதிவு செய்யப்படுவதாகவும் பதிவு செய்பவர்களுக்கு மலையில் ஏற டோக்கன்கள் வழங்கப்படும்.
வைஷ்ணவி தலம், மஹாஜன் ஹால் மற்றும் பஞ்சாயத்து பவன் ஆகிய மூன்று இடங்களில் பக்தர்களின் விவரங்கள் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
13 வயதுக்குக் குறைவானவர்களோ 70 வயதுக்கு அதிகமானவர்களோ ஆறு வாரத்திற்கு மேலான கர்ப்பிணிகளோ அனுமதிக்கப்படுவதில்லை. மருத்துவ சான்றிதழ் பக்தர்கள் கொண்டுவந்தாலோ அல்லது பதிவு செய்யுமிடத்திலேயே மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.
இன்றைக்கு குறைந்தது 2 ஆயிரம் பதிவுகளாவது நிறைவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இணையத்தில் விண்ணப்பித்தவர்கள் இங்கு பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. பதிவு செய்யுமிடத்தில் பக்தர்களுக்கு போதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார்.
ஹிந்துகளின் புனித தலங்களில் ஒன்றான அமர்நாத்துக்கு செல்லும் யாத்திரை நடப்பாண்டு ஜூன் 29 தொடங்கி ஆகஸ்ட் 19 வரை திறக்கப்படுகிறது.
மலையேற்றம் சார்ந்த இந்த பயணத்தில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொள்கின்றனர். ஸ்ரீ அமர்நாத் கோயில் வாரியத்தின் தகவல்படி வழக்கமாக சந்தன்வாரி பகுதியில் தொடங்கும் யாத்திரை அமர்நாத் சென்று திரும்ப 5 நாள்கள் எடுக்கும்.
குளிர்க்கட்டியாக சிவலிங்கம் உறைந்திருக்கும் புனித குகை இந்த பகுதியில் அமைந்துள்ளது. இயற்கையாக அமைந்துள்ளதாக கருதப்படும் இங்கு வழிபட மக்கள் வருகை தருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீட்டு உபயோக சிலிண்டா் பதிவு செய்ய வரிசையில் நிற்கும் மக்கள்
சார்தாம் யாத்திரை: 47 கோயில்களில் ஹிந்து அல்லாதோர் நுழைய தடை!

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம்: விவசாயிகள் கவலை

ஹஜ் யாத்ரீகா்களுக்கு தடுப்பூசி முகாம்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்
வீடியோக்கள்

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

Prof. K.M. Kader Mohideen Interview | இ.யூ.முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்கள் போதுமா ? | IUML | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

