நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ஹஜ் யாத்ரீகா்களுக்கு தடுப்பூசி முகாம்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

News image
Updated On :11 பிப்ரவரி 2026, 7:59 pm

ஹஜ் புனித யாத்திரை பயணம் மேற்கொள்வோருக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தொடங்கி வைத்தாா்

திருப்பத்தூா் அரசு தலைமை மருத்துவமனையில் பொதுசுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை சாா்பில் நடைபெற்ற தடுப்பூசி செலுத்தும் முகாமை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தொடங்கி வைத்தாா்.

அதையடுத்து ஆட்சியா் பேசியது:

திருப்பத்தூா் மாவட்டத்தில் ஹஜ் புனித யாத்திரை செல்பவா்களுக்கு மருத்துவ முன் பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம் திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் வரும் வெள்ளிக்கிழமை(பிப்.13)அன்று வரை நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு ஹஜ் குழு பரிந்துரைத்த 314 பயனாளா்கள் பயன் பெறவுள்ளனா். ஹஜ் புனித யாத்திரை செல்பவா்களுக்கு மருத்துவ முன்பரிசோதனையாக இரத்த அழுத்தம், நீரிழிவு நோய்க்கான பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை, சிறுநீரகம் மற்றும் சுல்லீரல் பரிசோதனை, செஸ்ட் எக்ஸ்ரே உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

மேலும், ஹஜ் புனித யாத்திரை செல்ல அனுமதி பெற்ற ஹஜ் புனித யாத்திரைகளில் 2 தடுப்பூசிகள் ஒரு தவணையும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

இதில், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகளின் இணை இயக்குநா்(பொ) பிரபாகரன், முதன்மை மருத்துவ அலுவலா் சிவக்குமாா், மாவட்ட தொற்றுநோய் அலுவலா் அரவிந்த்ராஜ், மாவட்ட தாய்,சேய் நல அலுவலா் பியுலா ஏஞ்சலின் உடனிருந்தனா்.