தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவாலின் கைதை கண்டித்து குடியரசுத் தலைவரின் உரையை ஆம் ஆத்மி எம்பிக்கள் புறக்கணிப்பதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்திருந்தது.
இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஸ்வாதி மாலிவால் மட்டும் கூட்டுக் கூட்டத்தொடரில் பங்கேற்க நாடாளுமன்றத்துக்கு வருகை தந்திருந்தார்.
18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று மாநிலங்களவையில் தொடங்கவுள்ளதால் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் மரபுப்படி குடியரசுத் தலைவர் உரையாற்றினார்.
இந்த நிலையில், குடியரசுத் தலைவரின் உரை என்பது மத்திய அரசு எழுதிக் கொடுத்ததுதான் என்பதால் அவரின் உரையை புறக்கணிப்பதாக ஆம் ஆத்மியின் சஞ்சய் சிங் இன்று காலை அறிவித்திருந்தார்.
தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்தில் பாதாகைகளுடன் ஆம் ஆத்மி எம்பிக்கள் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கேஜரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக காவல்துறையில் புகார் அளித்த கட்சியின் அதிருப்தி எம்பி ஸ்வாதி மாலிவால் மட்டும் கூட்டத்தொடரில் பங்கேற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.