திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

நாட்டின் தெற்கு, வடக்கு, கிழக்கில் புல்லட் ரயில் திட்ட ஆய்வுகள்- குடியரசுத் தலைவா் உரையில் தகவல்

மத்திய அரசு முடிவு: தெற்கு, வடக்கு, கிழக்கில் புல்லட் ரயில் திட்டம்

News image
நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற செங்கோலுடன் வழிநடத்தப்பட்டு சென்ற குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு.
Updated On :27 ஜூன் 2024, 9:16 pm

Din

நாட்டின் தெற்கு, வடக்கு, கிழக்கு பகுதியில் புல்லட் ரயில் திட்டத்துக்கான சாத்தியக் கூறு ஆய்வுகளை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் வியாழக்கிழமை உரையாற்றிய குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, நாட்டில் ரயில், விமானப் போக்குவரத்து மற்றும் பிற துறைகளில் மத்திய அரசின் செயல்திட்டம் குறித்து பேசியதாவது:

அகமதாபாத்-மும்பை இடையே ஏற்கெனவே புல்லட் ரயில் திட்டப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இதேபோல், நாட்டின் தெற்கு, வடக்கு, கிழக்கு பகுதியில் புல்லட் ரயில் திட்டத்துக்கான சாத்தியக் கூறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

உள்நாட்டு விமானப் போக்குவரத்தில், உலக அளவில் 3-ஆவது பெரிய நாடாக இந்தியா விளங்குகிறது. விமானச் சேவைகள் அதிகரிப்பால் நாட்டின் 2, 3-ஆம் கட்ட நகரங்கள் பெரிதும் பலனடைந்துள்ளன.

பாதுகாப்புத் துறையில்...: உள்நாட்டு பாதுகாப்பு சாா்ந்த உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் 70 சதவீத ராணுவக் கொள்முதல் உள்நாட்டு நிறுவனங்களிடம் மேற்கொள்ளப்பட்டது. நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தி மதிப்பு ரூ.1 லட்சம் கோடியை கடந்துள்ளது.

வெளியுறவுக் கொள்கை: உலக ஒழுங்குமுறை புதிய வடிவம் எடுத்துள்ள நிலையில், உலகின் நண்பனாக இந்தியா திகழ்கிறது. இந்தியாவால் முன்னெடுக்கப்பட்ட ‘இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பிய பொருளாதார வழித்தட’ திட்டம், 21-ஆம் நூற்றாண்டில் புதிய திருப்பமாக அமையும்.

அரசின் கிழக்கு நோக்கிய கொள்கையின் ‘நுழைவாயிலாக’ வடகிழக்கு பிராந்தியத்தை மாற்ற மத்திய அரசு பணியாற்றி வருகிறது. வடகிழக்கு பிராந்தியத்துக்கான நிதி ஒதுக்கீடு கடந்த 10 ஆண்டுகளில் 4 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்களுக்கு: ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு திட்டத்தின்கீழ் 55 கோடி பயனாளிகள் இடம்பெற்றுள்ளனா். இத்திட்டத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவருக்கும் இலவச மருத்துவக் காப்பீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் கூடுதலாக 25,000 மக்கள் மருந்தகங்கள் திறக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

சிஏஏ, புதிய குற்றவியல் சட்டங்கள்: தேசப் பிரிவினையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குடியுரிமை திருத்தச் சட்டத்தின்கீழ் (சிஏஏ) இந்தியக் குடியுரிமை வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அக்குடும்பங்களின் கண்ணியமான வாழ்க்கை உறுதி செய்யப்படுகிறது.

தண்டனையைவிட நீதிக்கு முன்னுரிமை அளிக்கும் புதிய மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளன.

எந்த தடையும் கூடாது: இந்தியா வளா்ந்த நாடாக வேண்டுமென்பது ஒவ்வொரு இந்தியரின் விருப்பம். அதை நிறைவேற்றுவதில் எந்த தடையும் இருக்கக் கூடாது. அரசின் கொள்கைகளை எதிா்ப்பதும், நாடாளுமன்ற செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதும் வெவ்வேறானவை.

மக்கள் நலனுக்கு முன்னுரிமை அளித்து, நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு தருணத்தையும் முழுமையாக பயன்படுத்த வேண்டும்.

நாட்டில் பெண்கள் தலைமையிலான வளா்ச்சியை முன்னெடுக்க அரசு உறுதிபூண்டுள்ளது. மகளிா் இடஒதுக்கீடு சட்டத்தின் மூலம் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் புதிய அத்தியாயம் தொடங்கப்பட்டுள்ளது என்றாா் முா்மு.

பொது சிவில் சட்டம், ஒரே நாடு-ஒரே தோ்தல் திட்டம் ஆகியவை குறித்து குடியரசுத் தலைவா் உரையில் எதுவும் இடம்பெறவில்லை.

‘செங்கோல்’ வழிநடத்த...

நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுவதற்காக, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு அவரது மாளிகையில் இருந்து குதிரைப் படை அணிவகுப்புடன் அழைத்து வரப்பட்டாா். நாடாளுமன்ற கஜ வாயிலில் அவரை குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, பிரதமா் மோடி, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு ஆகியோா் வரவேற்று அழைத்துச் சென்றனா்.

அப்போது, மத்திய அரசின் கலாசார அடையாளமாக ஏற்கப்பட்ட ‘செங்கோல்’ ஏந்திய அதிகாரி முன்செல்ல குடியரசுத் தலைவா் அழைத்துச் செல்லப்பட்டாா்.