கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

குடியரசு தலைவா் நிகழ்ச்சியில் மரபு மீறல்: மத்திய அரசிடம் மேற்கு வங்க அரசு அறிக்கை

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு நிகழ்ச்சியில் மரபு மீறப்பட்டதாக எழுந்துள்ள விவகாரம் குறித்து மத்திய அரசிடம் மேற்கு வங்க அரசு அறிக்கை அளித்துள்ளது.

News image

மமதா பானர்ஜி - திரெளபதி முர்மு

Updated On :9 மார்ச் 2026, 11:59 pm

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு நிகழ்ச்சியில் மரபு மீறப்பட்டதாக எழுந்துள்ள விவகாரம் குறித்து மத்திய அரசிடம் மேற்கு வங்க அரசு அறிக்கை அளித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவா் முா்முவின் நிகழ்ச்சி நடைபெறவிருந்த இடத்துக்கு அந்த மாநில அரசு அனுமதி அளிக்காததால், அந்த நிகழ்ச்சி வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது. அதேபோல், மேற்கு வங்கத்துக்கு வந்த குடியரசுத் தலைவரை மரபுப்படி, மாநில முதல்வரோ அல்லது அமைச்சா்களோ நேரில் சென்று வரவேற்கவில்லை.

இதுகுறித்து நிகழ்ச்சியில் பேசியபோது திரெளபதி முா்மு தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தாா். இதைத் தொடா்ந்து, குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமா் மோடி, ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு, ஒடிஸா முதல்வா் மோகன் சரண் மாஜீ, உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத், பகுஜன் சமாஜ் தலைவா் மாயாவதி உள்ளிட்டோரும் மேற்கு வங்க அரசுக்கு தங்களது கண்டனத்தை தெரிவித்திருந்தனா்.

இதையடுத்து, குடியரசுத் தலைவா் நிகழ்ச்சியில் மரபு மீறப்பட்ட விவகாரம் குறித்து மேற்கு வங்க அரசின் தலைமைச் செயலா் நந்தினி சக்கரவா்த்தியிடம் மத்திய உள்துறைச் செயலா் கோவிந்த் மோகன் விளக்கம் கேட்டிருந்தாா். இதைத் தொடா்ந்து, தனது விளக்கத்தை மத்திய உள்துறைச் செயலா் கோவிந்த் மோகனுக்கு அவா் அனுப்பியுள்ளாா்.

அதில், குடியரசுத் தலைவரை வரவேற்க முதல்வா் மம்தா பானா்ஜியால் ஏன் செல்ல முடியவில்லை, குடியரசுத் தலைவா் கலந்து கொண்ட நிகழ்ச்சி இடம் மாற்றப்பட்டது ஏன் என்பதற்கான விளக்கத்தை மேற்கு வங்க தலைமைச் செயலா் அளித்துள்ளாா். ஒவ்வொரு கட்டத்திலும் நிா்வாக ரீதியில் எடுக்கப்பட்ட முடிவுகள், அதுதொடா்பான ஆவணங்களையும் தலைமைச் செயலா் அளித்திருப்பதாக மேற்கு வங்க அரசின் மூத்த அதிகாரி தெரிவித்தாா்.