மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

கேரளத்தை மாற்ற முடிந்தால், மேற்கு வங்கத்தை ஏன் மாற்ற முடியாது? உமர் அப்துல்லா

மேற்கு வங்க பெயர் மாற்றக் கோரிக்கை பற்றி..

முதல்வர் உமர் அப்துல்லா

Published On :

கேரள மாநிலத்தின் பெயரை மாற்றும் முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, மேற்கு வங்க அரசின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வேண்டும் என ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.

கேரள அரசின் பெயரைக் கேரளம் என மாற்றுவதற்கான கேரள அரசின் முன்மொழிவை மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை அங்கீகரித்தது.

கேரள மாநில பெயரை மாற்றிய நிலையில், தனது மாநிலத்தின் பெயரையும் மாற்றும் திட்டம் நீண்ட காலமாக மத்திய அரசிடம் நிலுவையில் உள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி அதிருப்தி தெரிவித்தார்.

இந்த நிலையில், கேரளத்தை மாற்ற முடியும் என்றால் ஏன் மேற்கு வங்க பெயரை மாற்ற முடியாது? என மத்திய அரசுக்கு ஜம்மு-காஷ்மீர் முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய உமர் அப்துல்லா,

மற்ற மாநிலங்களும் பெயர் மாற்றங்களை முன்மொழிந்துள்ளன. இந்தக் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வேண்டும்.

எதிர்காலத்தில் ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையில் இதேபோன்ற முன்மொழிவு முன்வைக்கப்பட்டால், மத்திய அரசு அதற்கு உரிய பரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

காஷ்மீர் வருகை தந்த குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணனையும் முதல்வர் வரவேற்றார். காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் 21வது பட்டமளிப்பு விழாவில் அவர் கலந்து கொள்கிறார்.

குடியரசு துணைத் தலைவராகப் பதவியேற்ற பிறகு முதல்முறையாகக் காஷ்மீருக்கு வருகை தந்துள்ள நிலையில் நாங்கள் அவரை வரவேற்கிறோம் என்று உமர் அப்துல்லா கூறினார்.

Summary

Jammu and Kashmir Chief Minister Omar Abdullah on Wednesday said the Centre should accept the West Bengal government's demand to rename the state, following the Union Cabinet's approval of a similar proposal for Kerala.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விடியோக்கள்