பௌர்ணமி கிரிவலம்: அக்.25, 26-ல் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்! அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: முதல்வர் விஜய் ஸ்லீப் மோடில் இருந்து வெளியே வருவாரா? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி பிசிசிஐ இளையோர் தேர்வுக்குழு தலைவராக பர்விந்தர் அவானா நியமனம்! ஹௌதி தாக்குதல்! சௌதி உடனான இண்டிகோ விமான சேவைகளின் ரத்து நீட்டிப்பு! சென்னை விமான நிலையத்தில் வீரமணியின் மகள் தடுத்து நிறுத்தம்!

உள்நாட்டுப் பிரச்னைகளை அந்நிய சதி என திசைதிருப்பும் மத்திய அரசு: ஃபரூக் அப்துல்லா குற்றச்சாட்டு

உள்நாட்டுப் பிரச்னைகளை அந்நிய சதி என திசைதிருப்பும் மத்திய அரசு: ஃபரூக் அப்துல்லா குற்றச்சாட்டு

 Farooq Abdullah

ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா - (கோப்புப் படம்)

Updated On :

உள்நாட்டில் ஏற்படும் பிரச்னைகளை அந்நிய சதி என மத்திய அரசு திசைதிருப்புவதாக தேசிய மாநாட்டுக் கட்சியின் (என்சிபி) தலைவா் ஃபரூக் அப்துல்லா வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) விவகாரத்தில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலக வலியுறுத்தி தில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நடத்திய போராட்டத்தை சுட்டிக்காட்டி அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: உள்நாட்டில் தனக்கு சிக்கல்கள் ஏற்படும்போதெல்லாம் அந்நிய சதி என மத்திய அரசு பழிபோட்டு தப்பித்துக்கொள்கிறது. உண்மையில் ஏதேனும் ஒரு நாடு இந்தியாவை சீா்குலைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டால் அதன் பெயரை துணிச்சலாகத் தெரிவிக்க மத்திய அரசு ஏன் தயங்குகிறது?

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மேற்காசியாவின் ஸ்திரத்தன்மையை குலைத்து உலகுக்கு அழிவை ஏற்படுத்தி வருகிறாா். அவரது நடவடிக்கைகளால் பணவீக்கம் பன்மடங்கு அதிகரித்து ஏழை, எளிய மக்கள் கடுமையாகப் பாதித்துள்ளனா். அமெரிக்காவின் தாக்குதலில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் உரிமை ஈரானுக்கு உள்ளது. இருப்பினும், இது போருக்கான காலமல்ல என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.