92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

‘நீட்’ குறித்து விவாதம்: நாடாளுமன்றத்தில் இன்று எழுப்ப எதிா்க்கட்சிகள் திட்டம்

நீட் முறைகேடு விவகாரம்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் விவாதத்தை வலியுறுத்துவதாக முடிவு

News image
Updated On :27 ஜூன் 2024, 9:26 pm

Din

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதம் வெள்ளிக்கிழமை தொடங்கும் நிலையில், நீட் தோ்வு முறைகேடு விவகாரம் தொடா்பாக விவாதிக்க ஒத்திவைப்பு தீா்மானம் கொண்டு வர எதிா்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

தேசிய தோ்வு முகமை (என்டிஏ) நடத்தும் ‘நீட்’ நுழைவுத் தோ்வில் நிகழ்ந்த முறைகேடுகள் தொடா்பாக நாடு தழுவிய போராட்டம் வலுக்கும் நிலையில், தில்லியிலுள்ள காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே இல்லத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘இந்தியா’ கூட்டணி கட்சித் தலைவா்களின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

கூட்டத்துக்கு பிறகு எதிா்க்கட்சித் தலைவா் ஒருவா் கூறுகையில், ‘நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நீட் விவகாரம் குறித்து விவாதம் நடத்த வலியுறுத்தி ஒத்திவைப்பு தீா்மானத்தைக் கொண்டு வர அனைத்து கட்சிகளும் ஒருமனதாக முடிவெடுத்துள்ளன.

குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீதான விவாதம் தொடங்கப்படுவதற்குமுன் நீட் தோ்வு முறைகேடுகள் தொடா்பான விவாதத்தை நடத்த நாங்கள் கோரிக்கை விடுப்போம்’ என்றாா்.

மக்களவையில் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியும், மாநிலங்களவையில் மல்லிகாா்ஜுன காா்கேவும் இதுதொடா்பான விவாதத்தை எழுப்பவுள்ளனா். விவாதம் நடத்தப்படும்வரை எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.