ராகிங் கொடுமை: எம்பிபிஎஸ் மாணவர் மருத்துவமனையில் அனுமதி -7 சீனியர்கள் மீது வழக்கு!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதலாமாண்டு மாணவருக்கு டயாலிஸ் சிகிச்சை.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

ராஜஸ்தான் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் ராகிங் கொடுமை செய்ததில் உடல்நிலை பாதிக்கப்பட்ட முதலாமாண்டு மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துன்கார்பூர் பகுதியில் உள்ள மருத்துவக் கல்லூரியில் பயிலும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் கடந்த மே 15-ஆம் தேதி, முதலாம் ஆண்டு மாணவரை ராகிங் கொடுமை செய்துள்ளனர்.

கல்லூரியின் அருகே முதலாமாண்டு மாணவரை கடந்த மாதம் 300-க்கும் அதிகமான முறை தோப்புக்கரணம் போட வைத்துள்ளனர். இதில், சிறுநீரக அழுத்தம் ஏற்பட்ட முதலாமாண்டு மாணவர் அகமதாபாத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவருக்கு 4 முறை டயாலிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்
புதிய குற்றவியல் சட்டத்துக்கு எதிராக கருப்பு தினம் அனுசரிப்பு: மே. வங்க பார் கவுன்சில்

இதுதொடர்பாக முதலாமாண்டு மாணவர் கல்லூரிக்கு எவ்வித புகாரும் அளிக்காமல் இருந்த நிலையில், ஜூன் 20-ஆம் தேதி கல்லூரியின் இ-மெயிலுக்கு புகார் வந்துள்ளது.

இந்த புகாரை தொடர்ந்து கல்லூரியின் முதல்வர் நடத்திய விசாரணையில் ராகிங் கொடுமை உறுதி செய்யப்பட்டதால், காவல்துறையில் 7 சீனியர் மாணவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைப்படி 7 மாணவர்களையும் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, 7 இரண்டாம் ஆண்டு மாணவர்கள் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com