
நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் இன்று தொடங்கியுள்ள நிலையில், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு எம்.பி.க்கள் மாநிலங்களவை உறுப்பினர்களாக இன்று பதவியேற்றுக்கொண்டனர்.
இரு அவைகளின் கூட்டம் இன்று காலை தொடங்கியுள்ள நிலையில் அவைகளின் கூட்டுத்தொடரில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார்.
இந்த நிலையில், மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்கும் புதிய எம்.பி.க்களை தலைவர் ஜெகதீப் தங்கர் வரவேற்றார். அதைத்தொடர்ந்து காங்கிரஸ் எம்பி அகிலேஷ் பிரசாத் சிங்(பிகார்) முதலில் பதவியேற்றுக்கொண்டார். அதற்கடுத்து, ஜார்க்கண்டை சேர்ந்த ஜேஎம்எம்-ன் சர்பராஸ் அகமது மற்றும் பாஜகவின் பிரதீப் குமார் வர்மா பதவியேற்றனர்.
பின்னர், மத்தியப் பிறசேதத்தைச் சேர்ந்த பாஜகர் தலைவர்கள் பன்ஷிலால் குர்ஜார், மாயா நரோலியா மற்றும் பால்யோகி உமேஷ்நாத் ஆகியோரும் மாநிலங்களவையின் உறுப்பினராகப் பதவியேற்றனர்.
பாஜகவைச் சேர்ந்த ஐந்து பேர் மற்றும் காங்கிரசை சேர்ந்த ஒருவரும் இந்தியில் பதவியேற்றுக் கொண்டனர்.
பதவியேற்பின்போது பிரதமர் நரேந்திர மோடி, அவைத் தலைவர் ஜே.பி. நட்டா, எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.