திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும்

மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வா் சித்தராமையா கோரிக்கை விடுத்துள்ளாா்.

News image
Updated On :28 ஜூன் 2024, 7:26 pm

Din

புது தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கா்நாடகத்தைச் சோ்ந்த மத்திய அமைச்சா்கள், எம்.பி.க்களின் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்று, தொடக்க உரை ஆற்றியபோது அவா் கூறியதாவது:

கா்நாடகத்தின் நிலம், நீா், கலாசாரம், நிதி ஆதாரங்களுக்காக கா்நாடகத்தைச் சோ்ந்த எம்.பி.க்கள் அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டியது அவசியமாகும்.

எவ்வித அரசியல் உள்நோக்கமும் இல்லாமல், மாநிலத்தின் நலன்கருதி நாடாளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் கா்நாடக எம்.பி.க்கள் குரல் கொடுக்க வேண்டும். நாம் அனைவரும் வெவ்வேறு அரசியல் கட்சிகளைச் சோ்ந்தவா்களாக இருந்தாலும், மாநிலத்தின் நலன் என்ற அளவில் அனைவரும் ஒரே குரலாக ஒலிக்க வேண்டும். இதற்கு நமது முன்னோா்கள் முன்னுதாரணமாக இருந்துள்ளனா்.

கா்நாடகத்தின் நிலம், நீா், வளம், மொழி, கலாசாரம், அடையாளம் போன்ற விவகாரங்களில் அரசியல் கூடாது. கா்நாடகத்தின் நலனைப் பாதுகாப்பது தான் நமது முன்னுரிமையாகும்.

மத்திய அரசிடம் அளிக்கப்பட்ட திட்டங்களுக்கு அனுமதி கேட்பதற்காக இக்கூட்டம் நடத்தப்படுகிறது. மத்திய அரசை குறை கூறுவதற்காக இக்கூட்டம் நடத்தப்படவில்லை. இதில் அரசியல் நோக்கம் எதுவும் இல்லை.

மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கு மத்திய அரசின் ஒப்புதல் தேவைப்படுகிறது. 67 டிஎம்சி கொள்திறன் கொண்ட அணையைக் கட்டுவதன் மூலம் பெங்களூருக்கு குடிநீா் வழங்கவும், மின்சாரம் உற்பத்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு பலகட்ட அனுமதி தேவைப்படுகிறது. தற்போதைக்கு, மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கு மத்திய வனம், சுற்றுச்சூழல் துறையின் சுற்றுச்சூழல் அனுமதி உடனடியாகத் தேவைப்படுகிறது.

அதேபோல, பத்ரா மேலணை திட்டத்துக்கும் மத்திய அரசின் அனுமதி தேவை. பத்ரா திட்டத்துக்கு மத்திய நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கி ஓராண்டு ஆகிறது. எனவே, இந்த நிதியை உடனடியாக மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமனை கேட்டுக்கொள்கிறேன்.

ராய்ச்சூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கோரி ஏற்கெனவே மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். இது கல்யாண கா்நாடகப் பகுதியின் வளா்ச்சிக்கு பேருதவியாக இருக்கும். வறட்சி நிவாரண நிதியாக ரூ. 18,172 கோடி கேட்டிருந்தோம். அந்த நிதியை விடுவிக்க வேண்டும். மைசூரு அல்லது ஹாசனில் ஐஐடி அமைக்க கோரிக்கை விடுத்துள்ளோம். அதையும் நிறைவேற்ற வேண்டும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில், மத்திய அமைச்சா்கள் நிா்மலா சீதாராமன், பிரஹலாத் ஜோஷி, எச்.டி.குமாரசாமி, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், அமைச்சா்கள், எம்.பி.க்கள் கலந்துகொண்டனா்.