தில்லி விமான நிலைய வடிவமைப்பு யாருடையது? எல்&டி விளக்கம்!

மேற்கூரை சரிந்ததால், வடிவமைப்பு குறித்து பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இடிந்து விழுந்த தில்லி விமான நிலைய டெர்மினல்-1 மேற்கூரை
இடிந்து விழுந்த தில்லி விமான நிலைய டெர்மினல்-1 மேற்கூரை

தில்லியில் பெய்து வரும் மழையில் இந்திரா காந்தி விமான நிலையத்தின் மேற்கூரை (முனையம் 1) சரிந்து விழுந்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார்.

உலகத் தரம் வாய்ந்த விமான நிலையம் என்று புகழப்படும் தில்லி விமான நிலையத்தின் மேற்கூரை சரிந்ததாலும், பல்வேறு இடங்களில் தண்ணீர் கசிந்ததாலும் அதன் வடிவமைப்பு குறித்து பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

விமான போக்குவரத்துத் துறை முன்னாள் அமைச்சர் பிரஃபுல் பட்டேலும் தில்லி விமான நிலையத்தின் மேற்கூரை வடிவமைப்பு பணிகளை மேற்கொண்டது எல் & டி நிறுவனம்தான் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தில்லி விமான நிலைய வடிவமைப்பு குறித்து கட்டுமான தொழில்நுட்ப நிறுவனமான எல் & டி விளக்கம் அளித்துள்ளது.

ஜூன் 28, 2024 அன்று தில்லி விமான நிலையத்தின் முனையம் 1 சரிந்து விழுந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

சரிந்து விழுந்த முனையத்தை எல் & டி வடிவமைக்கவில்லை என்பதை விளக்க விரும்புகிறோம். அதன் பராமரிப்பு பணிகளுக்கும் நாங்கள் பொறுப்பேற்கவில்லை. இதன் வடிவமைப்பு 2009-ல் மற்றொரு நிறுவனத்தால் அமைக்கப்பட்டது.

தில்லி சர்வதேச விமான நிலைய நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று, அந்த முனையத்தின் விரிவாக்கப் பணிகளை மட்டுமே 2019ஆம் ஆண்டு எல் & டி செய்து கொடுக்க ஒப்புக்கொண்டது. 2024 மார்ச் மாதம் விரிவாக்கப் பணிகள் முடிக்கப்பட்டன.

விரிவாக்கப் பணிகள் நடைபெற்ற இடத்திலிருந்து 110 மீட்டர் தூரத்தில் அசம்பாவிதம் நடந்துள்ளது. முனையத்தில் ஏற்பட்ட சரிவு, இந்த விரிவாக்கத்தில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என உறுதியளிக்கிறோம் என விளக்கம் அளித்துள்ளது.

இடிந்து விழுந்த தில்லி விமான நிலைய டெர்மினல்-1 மேற்கூரை
2023ல் திறக்கப்பட்ட ராஜ்கோட் விமான நிலையத்திலுமா? 3 நாள்களில் 3-வது சம்பவம்!

கனமழை காரணமாக குஜராத் மாநிலம் ராஜ்கோட் விமான நிலையத்தில் விமானப் பயணிகள் இறங்கும் மற்றும் வெளியேறும் இடத்தில் இருந்த மேற்கூரை இன்று சரிந்து விழுந்துள்ளது.

கடந்த 3 நாள்களில் மட்டும் 3 இடங்களில் விமான நிலைய கட்டடம் சரிந்து விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com