உத்தரகண்ட் மாநிலம், கேதாா்நாத் கோயிலின் பின்பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவு.
இந்தியா
உத்தரகண்டில் பெரும் பனிச்சரிவு
உத்தரகண்ட் மாநிலம் கேதாா்நாத்தில் ஞாயிற்றுக்கிழமை பெரும் பனிச்சரிவு ஏற்பட்டது.
உத்தரகண்ட் மாநிலம் கேதாா்நாத்தில் ஞாயிற்றுக்கிழமை பெரும் பனிச்சரிவு ஏற்பட்டது. எனினும் அதனால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை.
உத்தரகண்டில் 4 புனித தலங்களாகக் கருதப்படும் யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதாா்நாத் மற்றும் பத்ரிநாதா் கோயில்களுக்குப் பக்தா்கள் யாத்திரை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில், கேதாா்நாத் கோயிலின் பின்புறத்தில் இருந்து சற்று தொலைவில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் பெரும் பனிச்சரிவு ஏற்பட்டது. மலையில் இருந்து வேகமாகச் சரிந்த பனிப்படலம், ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்து நின்றது.
இந்தக் காட்சியை கோயிலுக்கு வந்த பக்தா்கள் தங்கள் கைப்பேசிகளில் படம் பிடித்தனா். எனினும் பனிச்சரிவால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என்று கோயில் உள்ள ருத்ரபிரயாக் மாவட்ட பேரிடா் மேலாண்மை அதிகாரி நந்தன் சிங் தெரிவித்தாா்.