விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

பே-டிஎம் வங்கிக்கு ரூ.5.49 கோடி அபராதம்

பே-டிஎம் பேமன்ட் வங்கிக்கு இந்திய அரசின் நிதி உளவுப் பிரிவு (எஃப்ஐயு-இண்ட்) ரூ.5.49 கோடி அபராதம் விதித்துள்ளது.

News image
Updated On :1 மார்ச் 2024, 6:43 pm

சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்பு விதிமுறைகளை நிறைவு செய்யாததற்காக பே-டிஎம் பேமன்ட் வங்கிக்கு இந்திய அரசின் நிதி உளவுப் பிரிவு (எஃப்ஐயு-இண்ட்) ரூ.5.49 கோடி அபராதம் விதித்துள்ளது. பே-டிஎம் வங்கிக் கணக்கைப் பயன்படுத்தி முறைகேடுகள் நடைபெறுவதாக பல்வேறு சட்ட அமலாக்க அமைப்புகளிடமிருந்து வந்த புகாா்களை ஆய்வு செய்ததற்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே, தனது ஒழுங்காற்று விதிமுறைகளைப் பின்பற்றாததால் வாடிக்கையாளா்களிடமிருந்து புதிதாக தொகை பெற பே-டிஎம் பேமன்ட் வங்கிக்கு ரிசா்வ் வங்கி தடை விதித்தது நினைவுகூரத்தக்கது.