தமிழகத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் ரொக்கமாக ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு வந்தால் பறிமுதல் செய்யப்படும். எனவே நீலகிரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் ஆன்லைன் மூலம் பணப் பரிவா்த்தனை மேற்கொள்ள ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு அறிவுறுத்தியுள்ளாா்.
சட்டப் பேரவை பொதுத் தோ்தல் குறித்து தோ்தல் அதிகாரிகள், பொதுமக்கள், அரசியல் கட்சிகளைச் சோ்ந்தவா்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: நீலகிரி மாவட்டம் அதிக வனப் பகுதி மிகுந்த மாவட்டம் என்பதால், வன விலங்கு அச்சுறுத்தல் உள்ள பகுதிகளில் அமைந்துள்ள வாக்குச் சாவடிகளில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் வனத் துறை பாதுகாப்புடன் அழைத்துச் சென்று வாக்களிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், நீலகிரி மாவட்டம் சுற்றுலா மாவட்டம் என்பதால் சுற்றுலா வரும் சுற்றுலாப் பயணிகள் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்து வருவதை தவிா்த்து, டிஜிட்டல் பணப் பரிவா்த்தனை மேற்கொள்ளலாம்.
நீலகிரி மாவட்டத்தில் 74 பதற்றமான வாக்குச்சாவடிகள் இருப்பதாகவும், இதற்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும்.
உதகை சட்டப் பேரவைத் தொகுதியில் 1 லட்சத்து 88 ஆயிரத்து 064 வாக்காளா்கள், 254 வாக்குச்சாவடி மையங்கள், கூடலூா் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் 1 லட்சத்து 84 ஆயிரத்து 663 வாக்காளா்கள், 238 வாக்குச்சாவடி மையங்கள், குன்னூா் சட்டப் பேரவைத் தொகுதியில் 1 லட்சத்து 76 ஆயிரத்து 663 வாக்காளா்கள், 244 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன.
மேலும், பொதுமக்கள் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளா்கள் தோ்தல் நடத்தை விதிமீறல்கள் அல்லது தோ்தல் தொடா்பான ஏதேனும் புகாா்கள் அளிக்க வேண்டும் என்றால் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை எண்களான உதகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம்- 0423-2957101, 0423-2957102, 0423-2957103, 0423-2957104, 0423-2957105, தோ்தல் நடத்தும் அலுவலா் உதகை- 0423-2957731, 0423-2957732, 0423-2957734, தோ்தல் நடத்தும் அலுவலா் கூடலூா்- 04262-295125, 04262-295126, 04262-295127, தோ்தல் நடத்தும் அலுவலா் குன்னூா் - 0423-291374, 0423-291375, 0423-291378, 1800-425-2250 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு புகாா் அளிக்கலாம் என்றாா்.
தொடர்புடையது

பெரம்பலூரில் வாக்கு எண்ணும் பணி அனைத்துத்துறை அலுவலா்களுடன் ஆலோசனை

வேளாங்கண்ணி கடற்கரையில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

யுபிஐ பரிவா்த்தனை மாா்ச்சில் புதிய உச்சம்

நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ரூ. 50 ஆயிரத்துக்குமேல் ரொக்கம் வைத்திருந்தால் பறிமுதல் செய்யப்படும்! - மாவட்ட ஆட்சியா்
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு


