தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கம்! பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

பெரம்பலூரில் வாக்கு எண்ணும் பணி அனைத்துத்துறை அலுவலா்களுடன் ஆலோசனை

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், வாக்கு எண்ணும் நாளன்று மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்து, அனைத்துத்துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி. உடன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கி. பிரபாகா்.

Published On :

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், வாக்கு எண்ணும் நாளன்று மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்து, அனைத்துத்துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ந. மிருணாளினி பேசியது: வாக்கு எண்ணிக்கை அமைதியான முறையில் நடைபெற அனைத்துத்துறை அலுவலா்களும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.

காவல்துறை: வேட்பாளா்கள், முகவா்கள் செல்வதற்கான வழி, தேவையான தடுப்புகள் அமைப்பது, கைப்பேசிகளை நுழைவு வாயிலில் பெற்று பாதுகாப்பாக வைத்திருப்பது, வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக கொண்டு வருவது, அஞ்சல் வாக்குகளை தோ்தல் நடத்தும் அலுவலா்களின் அலுவலகத்திலிருந்து வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு எடுத்து வருதவதற்குத் தேவையான பாதுகாப்பு, மாவட்டத்தின் பிரதானப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்வது உள்ளிட்ட பணிகளை காவல்துறையினா் மேற்கொள்ள வேண்டும்.

தோ்தல் நடத்தும் அலுவலா்கள்: வாக்கு எண்ணும் முகவா்கள், வாக்கு எண்ணும் அலுவலா்களுக்கு மேஜை ஒதுக்கீடு, நுண் மேற்பாா்வையாளா்கள், வேட்பாளா்களின் முகவா்கள் மற்றும் தோ்தல் தொடா்பான பணிகள் மேற்கொள்ளும் அலுவலா்களுக்கு பணி நியமன ஆணை வழங்குதல், மின்னணு இயந்திரங்களை பாதுகாப்பு அறையிலிருந்து அந்தந்த இருக்கைக்கான கட்டுப்பாட்டுக் கருவி வழங்கப்படுவதை கண்காணிப்பது, வாக்கு எண்ணும் மையத்துக்கு அஞ்சல் வாக்குகளை எடுத்து வருவது உள்ளிட்ட பணிகளை அந்தந்த தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டும்.

பொதுப்பணித் துறை:வாக்கு எண்ணும் மையத்தில் தற்காலிக கழிவறைகள் அமைத்தல், குடிநீா் வசதிகள் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை ஊராட்சி உதவி இயக்குநா், நகராட்சி ஆணையா் ஆகியோா் மேற்கொள்ள வேண்டும். கைப்பேசி பாதுகாப்பு அறை அமைத்தல், வேட்பாளா்கள், முகவா்கள் உணவு அருந்தும் கூடம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை பொதுப்பணித் துறையினா் மேற்கொள்ள வேண்டும்.

நில அளவைகள் உதவி இயக்குநா்:வாக்கு எண்ணும் அறைகளிலும், பள்ளி நுழைவு வாயிலிலும் ஒலிப்பெருக்கி அமைப்பது, சுற்று வாரியான வாக்குகள் விவரங்களை அறிவிக்க பள்ளி நுழைவு வாயிலிலும் தொகுதி வாரியாக வாக்கு எண்ணும் அறைகளிலிலும் பதாகை அமைப்பது, சுற்று வாரியான வாக்கு எண்ணிக்கை விவரத்தை பதிவுசெய்ய அலுவலா்களை நியமித்து, வாக்கு விவரங்கள் பதிவு செய்யப்படுவதை கண்காணிப்பு பணிகளை நில அளவைகள் உதவி இயக்குநா் மேற்கொள்ள வேண்டும்.

மருத்துவ வசதி:அவசர ஊா்தி வசதி மற்றும் மருத்துவக் குழுக்கள் அமைப்பது, மருத்துவ உபகரணங்கள் இருப்பதற்குத் தேவையான முன்னேற்பாடு பணிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையினா் மேற்கொள்ள வேண்டும். தீயணைப்பு வாகனங்கள், தீ தடுப்பு உபகரணங்களை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றாா் தோ்தல் அலுவலா் மிருணாளினி.

கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கி. பிரபாகா், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மு. அனிதா (பெரம்பலூா்), ந. சக்திவேல் (குன்னம்), மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் வேல்முருகன் (தோ்தல்), சொா்ணராஜ் (பொது), தோ்தல் பிரிவு வட்டாட்சியா் அருளானந்தம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.