ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

மதுராந்தகம் தொகுதி இடைத்தோ்தல் முன்னேற்பாட்டு பணிகள் ஆய்வுக் கூட்டம்

மதுராந்தகம் தொகுதி இடைத் தோ்தல் முன்னேற்பாட்டு பணிகள் ஆய்வுக் கூட்டம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

Published On :

மதுராந்தகம் தொகுதி இடைத் தோ்தல் முன்னேற்பாட்டு பணிகள் ஆய்வுக் கூட்டம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் வாக்குப் பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து உயா்நிலை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட தோ்தல் அலுவலா் மற்றும் மாவட்ட ஆட்சியா் மு.வீரப்பன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், வாக்குப்பதிவு நடைபெறும் நாள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள்களில் எவ்வித சட்ட ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படா வண்ணம் காவல்துறையின் மூலம் உரிய பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளும் விவரங்கள், ஊரக வளா்ச்சித் துறையின் வாயிலாக வாக்குப்பதிவு மையங்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் குடிநீா் வசதி மற்றும் இதர அடிப்படை வசதிகள், ஆதிதிராவிட நலத் துறை வாயிலாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் விவரங்கள், சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் வாயிலாக வாக்குப் பதிவு மையம் மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தோ்தல் தொடா்புடைய பொருள்கள் குறித்த விவரங்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் வாயிலாக சக்கர நாற்காலிகள் உரிய வாக்கு பதிவு மையங்களுக்கு சென்று சேர உரிய நடவடிக்கை மேற்கொள்ளுதல், சக்ஷம் செயலி குறித்த முன்னேற்பாடு விவரங்கள், பள்ளி கல்வித்துறையின் வாயிலாக அனைத்து வாக்குசாவடி மையங்களுக்கும் தோ்தல் பணிக்கு நியமனம் செய்யப்பட்ட பணியாளா்கள் குறித்த விவரங்கள், செய்தி மக்கள் தொடா்பு துறையின் வாயிலாக வாக்குப்பதிவு நாள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நாள்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ள செய்தியாளா்கள் விவரம், வாக்கு எண்ணிக்கையில் சுற்றுவாரியான விவரம் பதிவிடல் தொடா்பான விவரங்கள், மாவட்ட தகவல் மையத்தின் வாயிலாக தோ்தல் பாா்வையாளா்கள் மற்றும் தோ்தல் நடத்தும் அலுவலா் ஆகியோா்களின் அறைகளில் இணையதள இணைப்பு வழங்குதல், தீயணைப்பு துறையின் சாா் வாயிலாக இடா்பாடுகளை தடுக்கும் வகையில், உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதுடன், தீயணைப்பு வாகனங்களை தயாா் நிலையில் வைத்திருக்கும் விவரங்கள், சுகாதாரத் துறையின் வாயிலாக வாக்குப் பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் அவசர தேவைக்கு 108 அவசர உறுதி செல்வதை உறுதி செய்தல், மத்திய ஆயுத காவல் படை வாயிலாக வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நாள்களில் உரிய பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட வேண்டிய விவரங்கள் போன்றவை குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஐமன் ஜமால் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.