34 மத்திய அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு: காந்திநகரில் அமித் ஷா போட்டி

34 மத்திய அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு: காந்திநகரில் அமித் ஷா போட்டி
Published on
Updated on
1 min read

வரும் மக்களவைத் தேர்தலில் 34 மத்திய அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர்கள் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

மக்களவைத் தோ்தல் வரும் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், தோ்தல் தேதியை தோ்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதனிடையே, தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளா்களை இறுதி செய்யும் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. ஆளும் பாஜகவும் தோ்தல் முன்னேற்பாடு பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா ஆகியோா் பல்வேறு மாநில பாஜக தலைவா்களுடன் தொகுதிகள் மற்றும் வேட்பாளா்களை இறுதி செய்வது தொடா்பாக கடந்த சில நாட்களாக ஆலோசனை மேற்கொண்டு வந்தனா். இந்த நிலையில் 543 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் முதற்கட்டமாக 195 பேர் கொண்ட பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது. இதனை தில்லி பாஜக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலர் வினோத் தாவ்டே வெளியிட்டுள்ளார். அதில், வாராணசி தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

34 மத்திய அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு: காந்திநகரில் அமித் ஷா போட்டி
வாரணாசியில் மீண்டும் பிரதமா் மோடி போட்டி: பாஜக முதல்கட்ட பட்டியல் வெளியீடு

மேலும் வரும் மக்களவைத் தேர்தலில் 34 மத்திய அமைச்சர்கள் மீண்டும் பாஜக சார்பில் களமிறங்குகின்றனர். அதன்படி மத்திய அமைச்சர்களான அமித் ஷா- காந்திநகர், ராஜ்நாத் சிங்-லக்னௌ, மன்சுக் மாண்டவியா-போர்பந்தர், ஜிதேந்திர சிங்-உதம்பூர், ஸ்மிருதி இரானி-அமேதி, ராஜீவ் சந்திரசேகர்-திருவனந்தபுரம், சர்பானந்தா சோனேவால்- திப்ரூகர், ஜோதிராதித்ய சிந்தியா-குணா, கிரண் ரிஜிஜூ- அருணாசல் மேற்கு தொகுதி உள்ளிட்ட தொகுதியில் போட்டியிடுகின்றனர். மேலும் ராஜஸ்தானின் கோட்டாவில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவும், திருச்சூரில் மலையாள நடிகர் சுரேஷ் கோபியும் வேட்பாளர்களாக களமிறங்குகின்றனர்.

முதற்கட்ட பட்டியலில் 28 பெண்கள், 27 பட்டியலினத்தவர், 18 பழங்குடியினர், 57 ஓபிசி பிரிவினர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் 80 மக்களவைத் தொகுதிகளைக்கொண்ட உத்திரப் பிரதேச மாநிலத்தில் 51 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கம் 26, மத்தியப் பிரதேசம் 24, குஜராத், ராஜஸ்தானுக்கு தலா 15, கேரளம்-12, அசாம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் தலா 11, தெலங்கானா 9, தில்லி 5, ஜம்மு-காஷ்மீர் 2, உத்தரகண்ட் 3, அருணாச்சல் 2, கோவா, திரிபுரா தலா ஒரு தொகுக்கும் வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com