ரூ.14 கோடியில் கைக்கடிகாரம்! ஆனந்த் அம்பானியைக் கண்டு வியந்த மார்க் ஸுக்கர்பெர்க், மனைவி

ரிச்சர்ட் மில் நிறுவனத்தின் கைக்கடிகாரங்களின் ஆரம்ப விலையே இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.68 லட்சம்.
ரூ.14 கோடியில் கைக்கடிகாரம்! ஆனந்த் அம்பானியைக் கண்டு வியந்த மார்க் ஸுக்கர்பெர்க், மனைவி

முகநூல் நிறுவனரான மார்க் ஸுக்கர்பெர்க்கும் அவரின் மனைவி பிரெசில்லா சானும் ஆனந்த் அம்பானியின் கைக்கடிகாரத்தைக் கண்டு வியந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

கைக்கடிகாரங்களின் மீது பற்றுதலின்றி இருந்த தனக்கு, ஆனந்த் அம்பானியின் கைக்கடிகாரத்தைக் கண்டு, கைக்கடிகாரங்களின் மீது ஆர்வம் ஏற்பட்டுள்ளதாகவும் ஸுக்கர்பெர்க் குறிப்பிட்டுள்ளார்.

ரிலையன்ஸ் நிறுவனர் முகேஷ் அம்பானி - நீடா அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கும், என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் வாரிசான ராதிகா மெர்சென்டுக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள அம்பானியின் சொந்த ஊரில் கட்டமைக்கப்பட்டுள்ள ரிலையன்ஸ் பசுமை வளாகத்தில் நடைபெற்று வரும் இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி, 3 நாள்களுக்கு நடைபெற்று வருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 1) தொடங்கிய திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் உலகம் முழுவதிலுமிருந்து தொழிலதிபர்கள், திரைப்பிரபலங்கள், மருத்துவத் துறை நிபுணர்கள், பொருளாதார நிபுணர்கள் பங்கேற்றுள்ளனர்.

முதல் நாளில் உலகப் புகழ்பெற்ற பாடகி ரிஹன்னாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சென்ட்டின் உணர்வுப்பூர்வமான உரை இடம்பெற்றிருந்தது.

இரண்டாம் நாளில் ரிலையன்ஸ் பசுமை வளாகத்தில் தங்கியிருக்கும் விருந்தினர்களை சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முகநூல் நிறுவனர் மார்க் ஸுக்கர்பெர்க் மற்றும் அவரின் மனைவி பிரெசில்லா சான் உடன் ஆனந்த் அம்பானி உரையாடினார்.

அப்போது ஆனந்த் அம்பானி கட்டியிருந்த கைக்கடிகாரம் ஸுக்கர்பெர்க்கையும், அவரின் மனைவி பிரெசில்லாவும் வெகுவாகக் கவர்ந்தது.

ரூ.14 கோடியில் கைக்கடிகாரம்! ஆனந்த் அம்பானியைக் கண்டு வியந்த மார்க் ஸுக்கர்பெர்க், மனைவி
அம்பானி வீட்டு திருமண விழாவில் உலக பிரபலங்கள் - புகைப்படங்கள்
dinamani

இதுகுறித்து கேட்டறிந்த பிரெசில்லா, கைக்கடிகாரம் மிகவும் அற்புதமாக இருப்பதாகவும், கவர்ந்திழுப்பதாகவும் குறிப்பிட்டார். அப்போது குறுக்கிட்டு பேசிய ஸுக்கர்பெர்க், இது குறித்து முன்னரே ஆனந்த் உடன் பேசியதாகவும், இதனையே தானும் கூறியதாகவும் சுட்டிக்காட்டினார். ''இதற்கு முன்பு கைக்கடிகாரங்கள் மீது எனக்கு ஆர்வம் இருந்ததில்லை. ஆனால், உங்கள் கைக்கடிகாரத்தைப் பார்த்தபிறகு அந்த எண்ணம் மாறிவிட்டது'' எனவும் ஸுக்கர்பெர்க் குறிப்பிட்டார்.

அதன்பிறகு தான் கட்டியுள்ள கைக்கடிகாரம் குறித்து ஆனந்த் அம்பானி அவர்களிடம் விவரித்தார். இது தொடர்பான விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

ரிச்சர்ட் மில் என்ற நிறுவனத்தின் கைக்கடிகாரத்தை ஆனந்த் அம்பானி கட்டியுள்ளார். அவர் கட்டியுள்ள கைக்கடிகாரத்தின் மதிப்பு சுமார் ரூ.14 கோடி எனக் கூறப்படுகிறது.

ரூ.14 கோடியில் கைக்கடிகாரம்! ஆனந்த் அம்பானியைக் கண்டு வியந்த மார்க் ஸுக்கர்பெர்க், மனைவி
அம்பானி வீட்டு விழாவில் பிரபலங்கள் - புகைப்படங்கள்
dinamani

ரிச்சர்ட் மில், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த நிறுவனம். இந்த நிறுவனத்தில் தயாரிக்கப்படும் கைக்கடிகாரங்கள் மிகவும் மதிப்பு மிக்கவையாக பார்க்கப்படுகிறது.

சிக்கலான வடிவமைப்பு மற்றும் உயர்தொழில்நுட்ப உதிரி பாகங்கள், பொருள்கள் இதனை மற்ற கைக்கடிகாரங்களிலிருந்து தனித்துவமானதாக்குகிறது. வைரங்களில் கூட ரிச்சர்ட் மில் நிறுவனத்தின் கைக்கடிகாரங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால், ஓராண்டுக்கு, மிகக்குறைந்த எண்ணிக்கையிலான கைக்கடிகாரங்களையே இந்த நிறுவனம் உற்பத்தி செய்கிறது.

ரிச்சர்ட் மில் நிறுவனத்தின் கைக்கடிகாரங்களின் ஆரம்ப விலையே இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.68 லட்சம் (48 ஆயிரம் டாலர்கள்).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com