உலக அரசியலில் கோலோச்சும் இந்தியப் பெண்கள்

எல்லை இனி இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில், உலக அரசியலில் இந்தியப் பெண்கள் பலரும் கோலோச்சி வருகிறார்கள்.
உலக அரசியலில் கோலோச்சும் இந்தியப் பெண்கள்

உலகளவில், வெறும் 31 நாடுகளில் மட்டுமே பெண்கள் மாநில மற்றும் மத்திய அரசின் தலைமைப் பொறுப்பில் உள்ளனர். அதோடு நான்கில் ஒருவருக்கும் குறைவானோர்தான் கேபினட் அமைச்சர்களாக உள்ளனர்.

மற்றும், பாலின சமத்துவத்தைப் பற்றி பேசும் 21ஆம் நூற்றாண்டில், மேற்கண்ட பெண் தலைவர்களில் 26.5 சதவீதம் பேர் எம்.பி.க்களாக உள்ளனர்.

உலக அரசியலில் கோலோச்சும் இந்தியப் பெண்கள்
அரை நூற்றாண்டுக்கு முன்னரே விதவைகள் மறுமண உதவித் திட்டம்! மறுமலர்ச்சியின் முன்னத்தி ஏர் தமிழ்நாடு!

2023ஆம் ஆண்டில் ஐ.நா. நடத்திய ஆய்வின் அடிப்படையில் வெளியான புள்ளிவிவரங்கள் அவ்வளவு வரவேற்கத்தக்கதாக இல்லாத போதிலும், உலகெங்கிலும் நீண்ட காலமாக ஆண்களால் ஆதிக்கம் செலுத்தும் துறைகளில் முன்னணியில் இருக்கும் அரசியல் களங்களில் ஒரு வலிமையான சக்தியாக பெண்கள் உருவாகி வருகின்றனர் என்றே சொல்லலாம்.

இந்தியாவை எடுத்துக்கொண்டால், ​​பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசில், அமைச்சர்களாக நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி உள்ளனர். ஆனால், இவர்களும் மற்ற மத்திய அமைச்சர்களும் இணைந்து பெண்களின் நலன் மற்றும் தேவைகளுக்கு உதவும் வகையில், மத்திய அரசு நிர்வாகத்தை உருவாக்குவதற்கான பணிகளில் தீவிரம்காட்டி வருகிறார்கள். மேற்கு வங்க முதல்வராக மம்தா பானர்ஜி பதவி வகிக்கிறார். மற்ற மாநிலங்களிலும் அமைச்சர் பதவிகளில் பெண்கள் உள்ளனர். அதேபோல இந்திய எல்லைக்கு அப்பாற்பட்டும் இந்தியப் பெண்கள் அரசியலில் பின்தங்கியிருக்கவில்லை.

அமெரிக்காவில், துணை அதிபர் கமலா தேவி ஹாரிஸ் -- ஜமைக்காவைச் சேர்ந்த தந்தை மற்றும் இந்தியத் தாய்க்கு பிறந்தவர் -- இந்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிபர் ஜோ பைடனுக்கு நெருங்கிய போட்டியாளராக உள்ளார், மேலும் அவர் தேர்தலில் வென்றால், அமெரிக்காவின் முதல் பெண் அதிபராகி, புதிய வரலாற்றை எழுத முடியும். அது மட்டுமல்லாமல், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்க அதிபர் என்ற பெருமையையும் சேர்ப்பார்.

இரண்டு நாள்களுக்கு முன்பு வரை, இரண்டு முறை தென் கரோலினா ஆளுநராக இருந்த நிக்கி ஹேலி - பஞ்சாபி சீக்கிய பெற்றோருக்கு பிறந்தவர் - 2024 ஆம் ஆண்டு வெள்ளை மாளிகையை அலங்கரிக்கும் அதிபர் வேட்பாளர் போட்டியில் குடியரசுக் கட்சியின் முன்னணி வீரரான டொனால்ட் டிரம்பிற்கு கடும் போட்டியாளராக இருந்தார். முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ஆட்சியின்போது, ஐநாவுக்கான அமெரிக்க தூதராக இருந்தவர்.

சென்னையில் பிறந்த பிரமிளா ஜெயபால் அமெரிக்க காங்கிரஸில் உள்ள ஐந்து இந்திய-அமெரிக்க உறுப்பினர்களில் ஒருவராகவும் மற்றும் வாஷிங்டனின் 7வது காங்கிரஸ் மாகாண பிரதிநிதியாகவும் விளங்குகிறார்.

கடந்த ஆண்டு, அவரது சகோதரி சுசீலா ஜெயபால், ஓரிகான் மாகாணத்திலிருந்து காங்கிரஸ் உறுப்பினராகும்ட முயற்சியைத் தொடங்கியிருந்தார்.

நியூ யார்க் மாகாண அலுவலகத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்து அமெரிக்கரான உறுப்பினராக இருக்கும் பெண் ஜெனிபர் ராஜ்குமார், இவர், ஒரே ஒரு சட்டமன்றக் கூட்டத்திலேயே அப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு தீபாவளி பண்டிகைக்கு விடுமுறையை அறிவிக்கும் தீர்மானத்தைக் கொண்டு வந்து அதில் வெற்றியும் பெற்றார். இதன் மூலம், அந்த மாகாணாத்தில் தெற்காசிய சமூகத்தின் இதயங்களையும் கொள்ளைகொண்டால்.

கடந்த ஆண்டு, ஆந்திரத்தைச் சேர்ந்த அருணா மில்லர், மேரிலாந்து மாகாணத்தின் லெப்டினன்ட் கவர்னராக பதவியேற்ற முதல் இந்திய-அமெரிக்க அரசியல்வாதி என்ற புதிய வரலாற்றை எழுதினார்.

ஆஸ்திரேலியாவில், 2022 ஆம் ஆண்டில் ஸ்வானிலிருந்து நாட்டின் கீழவை பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கோவா வம்சாவளியைச் சேர்ந்த முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் தொழிலாளர் கட்சி எம்.பி. ஸனேடா.

இதுபோல உலக அரசியலில் பெண்களின் எண்ணிக்கை ஆச்சரியத்தை அளிக்காவிட்டாலும், அந்த சிறு எண்ணிக்கையிலும் இந்தியப் பெண்களின் இருப்பானது நிச்சயம் பெருமைகொள்ள வைக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com