மகா சிவராத்திரி: திரியம்பகேஸ்வர் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!

மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்து வருகின்றனர்.
மகா சிவராத்திரி: திரியம்பகேஸ்வர் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!

மகாராஷ்டிரம், நாசிக் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற திரியம்பகேஷ்வர் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்து வருகின்றனர்.

12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றான திரியம்பகேஷ்வர் கோயிலில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

மக்கள் ஓம் நமசிவாயா... ஹர ஹர மகாதேவ்.. ஜெய் போலேநாத் என்று முழக்கங்களைச் சொல்லி உற்சாகத்துடன் வழிபட்டு வருகின்றனர்.

இன்று காலை முதலே சிவபெருமானை வழிபட ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். மேலும், மக்கள் ராம்குண்ட், தீத்ராஜ் குஷாவர்தாவில் புனித நீராடி வருகின்றனர்.

கூட்டத்தைக் கட்டுப்படுத்த போதிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com